இந்தியன் 2 ஓடாதா? இன்னும் 10 பைசாவிற்கு வியாபாரம் ஆகல.. பார்த்திபன் பேட்டி!
சென்னை: இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் டீன்ஸ். குழந்தைகளை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து வரும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன் படம் குறித்து பல விஷயத்தை பேசினார்.
வித்தியாசவிரும்பியான பார்த்திபன் இயக்கத்தில் கடைசியாக இரவின் நிழல் படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது. தற்போது அவர் முழுக்க சிறுவர்களை வைத்து டீன்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை பயாஸ்கோப் நிறுவனமும், அக்கிரா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்தை இயக்க டி. இமான் இசையமைத்துள்ளார்.

பார்த்திபன்: குழந்தைகளுடன் படம் பார்த்த பார்த்திபன் செய்தியாளர்களிடம் பேசினார். அதில் டீன்ஸ் படத்திற்கு கிடைத்து வரும் நல்ல விமர்சனத்தால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த படத்திற்காக நான் கோடி கோடியாக க நான் செலவு செய்து இருக்கிறேன். இந்த படத்திற்கு பிறகு நான் அடுத்து படம் எடுப்பேனா மாட்டேனா என்பது அளவிற்கு நான் நிறைய போராட்டத்தை சந்தித்துவிட்டேன். அது மட்டுமில்லாமல் கமலின் இந்தியன் 2 வெளியாகும் தேதியில் இந்த படத்தை வெளியிடலாமா என பல விதமாக யோசித்தேன் என்றார்.
இந்தியன் 2 ஓடாதா? : இதைத்தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், இந்தியன் 2 திரைப்படம் ஓடாது என்று தெரிந்து தான் டீன்ஸ் படம் வெளியாகும் அதே தேதியில் வெளியீட்டீர்களான என்று செய்தியாளர் ஒருவர் கேட்க, அந்த கேள்வியை கேட்டு சிரித்த பார்த்திபன், இதற்கு நான் சிரித்தாலும், நக்கலாக சிரித்தார் என்று தான் செய்தியில் போடுவார்கள். இந்தியன் 2 படம் பார்த்தவர்கள் படம் சூப்பராக இருக்கு என்று சொல்லி இருந்தால், நான் நேற்று இரவே படத்தை பார்த்து இருப்பேன். ஒரு படம் திரைக்கு வந்துவிட்டது என்றால், அதன் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை.
10 பைசாவிற்கு வியாபாரம் ஆகல: இந்தியன் 2 படம் வெளியாகும் அதே தேதியில் படத்தை வெளியிட வேண்டாம் தியேட்டர்கள் கிடைக்காது என்று சொன்னார்கள். இதை எல்லாம் தாண்டி எனக்கு படத்தின் மீது இருந்த நம்பிக்கையால் படத்தை துணிந்து வெளியிட முடிவு செய்தேன். ஏன் என்றார் டீன்ஸ் படம் இந்தியன் படம் போல ஊழல் பற்றி கதை இல்லை என்பதால் படத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அது மட்டுமில்லாமல் என் படம் இன்னும் பத்து பைசாவிற்கு கூட வியாபாரம் ஆகவில்லை. ஓடிடி, செட்டிலைட்ஸிடம் உண்மையில் என் படம் நன்றாக இருந்தது என்றால் படம் தியேட்டரில் வெளியாக பிறகு பார்த்துவிட்டு வாங்குகள் என்று சொன்னேன் என்று பார்த்திபன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











