Teens: பாக்யராஜ், அ.ஆ.. மட்டுமல்ல Aயும் கத்துக் கொடுத்தவர்.. பார்த்திபன் பேச்சு!

சென்னை: இயக்குநர் பாரத்திபன் புதிய பாதை படத்தை இயக்கி இயக்குநராக மாறினார். இவர் இதுவரை 15 திரைப்படங்களை இயக்கியும் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துமுள்ளார். வித்தியாச விரும்பியான இவர் ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற படத்தில் படம் முழுக்க இவர் ஒருவர் மட்டுமே நடித்திருந்தார். இந்த படம் பல விருதுகளை குவித்தது. இந்த படத்தைத் தொடர்ந்து இரவின் நிழல் திரைப்படம் நான் லீனியர் முறையில் எடுக்கப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்ற பாராட்டை பெற்றது. தற்போது பார்த்திபன் டீன்ஸ் என்ற படத்தை இயக்கி உள்ளார்.

13 குழந்தைகளை மையமாக வைத்து டீன்ஸ் என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படத்திற்கு இமான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கமலா தியேட்டரில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் டிரெய்லரை வெளியிட்டார். இந்த விழாவில் இயக்குநர்கள் பாக்யராஜ், கே.எஸ் ரவிக்குமார், பேரரசு, சரண், விருமாண்டி, இசை அமைப்பாளர் இமான், வனிதா விஜயகுமார், ரோபோ சங்கர், யோகி பாபு, புகழ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

Director Parthiban s speech Teenz Movie audio launch

வாழ்த்துக்கள்: அப்போது பேசிய கே.எஸ் ரவிக்குமார்,வித்தியாசம் என்றாலே அது பார்த்திபன் தான். என் ஆபிஸில் திட்டும் போதுகூட இவர் பெரிய பார்த்திபன் வித்தியாசமா பண்றாருன்னுதான் திட்டுவார்கள். இமான் சிறிய வயதில் இசை அமைக்க வந்தாலும் அவரது உழைப்பு தான் இன்று வரை அவரை கொடி நாட்ட வைத்துள்ளது. படம் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமையும் என்றார்.

புதுமை விரும்பி: அடுத்து பேசிய பாக்யராஜ், நாளை சூப்பர் ஸ்டார்களாக வளரப்போகும் டீன்ஸ் படத்தில் நடித்துள்ள 13 இளம் கஞைர்களுக்கு அவர்களது பெறோர்களுக்கும் வாழ்த்துக்கள், என்னுடைய உதவி இயக்குநுராக பணிபுரிந்த பார்த்திபன் இவ்வளவு பெரிய உயரத்தை தொட்டு இருப்பது மிகவும் பெருமை எப்போதும் வித்தியாசமாகவும், புதுமையாகவும் சிந்திப்பவர் பார்த்திபன். அவரது இந்த டீன்ஸ் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்றார்.

Director Parthiban s speech Teenz Movie audio launch

பார்த்திபன் பேச்சு: இதைத் தொடர்ந்து இறுதியாக பேசிய பார்த்திபன், என் குருநாதர் பாக்யராஜ் அவர்களுக்கு வணக்கம், அவர் எனக்கு அ...ஆவான மட்டுமில்ல Aவும் கற்றுக்கொடுத்த A1 இயக்குநருக்கு என் மனப்பூர்வமான நன்றி இது காலத்துக்குமானது என்று பார்த்திபன் தனது பாணியில் தனது ஆஸ்தான குருவுக்கு நன்றி சொன்னார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X