ஒருவர் வேடத்தில் நடிப்பதால் இந்த நாடு சீரழிந்து விடாது.. 800 படம் குறித்து இயக்குநர் பேரரசு அதிரடி!
சென்னை: முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இயக்குநர் பேரரசு அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமான 800 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.
இதுதொடர்பான மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. போஸ்டர் வெளியானது முதலே பிரச்சனைதான்.

எதிர்ப்பும் ஆதரவும்
ஈழத் தமிழர்களுக்கு எதிரானவரான முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என கண்டனக் குரல்களும் நடிப்பதால் என்ன என ஆதரவு குரல்களும் எழுந்த வண்ணம் உள்ளனர். திரைத்துறை பிரபலங்கள் முதல் அரசியல் கட்சியினர் வரை பலரும் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

வரவேற்கக்கூடிய விஷயம்
இந்நிலையில் இயக்குநர் பேரரசு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனின் படத்தில் நடிப்பது குறித்து எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
"முத்தையா முரளிதரன் தமிழின துரோகி!
விடுதலை புலிகளுக்கு எதிரானவர்!
அவரின் வாழ்க்கை வரலாறு படமான '800' திரைப்படத்தில் விஜயசேதுபதி நடிக்கக் கூடாது என்று இன்று தமிழ்ப் பற்றோடு பல கண்டனக்குரல்கள், எதிர்ப்புக்குரல்கள் இது வரவேற்கக்கூடிய விஷயம்தான்!

ஏன் ஒலிக்கவில்லை?
இன்று குரல் குடுக்கும் சில அரசியல்வாதிகள்
'விடுதலை புலிகள்' தீவிரவாத இயக்கம் என்று அறிவித்த கட்சியோடு கூட்டணி வைத்ததே, அப்பொழுது எங்கே போனது இந்த தமிழ்ப்பற்று? தமிழர்கள் லட்சக்கணக்கில் கொன்று குவிப்பதற்கு இங்கு சில கட்சிகளே காரணமாக இருந்ததே அதற்கு எதிராக இந்தக் குரல்கள் ஏன் ஒலிக்கவில்லை???
Recommended Video

ஒப்படைக்க துடிக்கிறீர்களே!
விடுதலை புலிகளையும், ஈழ தமிழினத்தை அழிப்பதற்கு ஒரு தேசியக் கட்சி உறுதுணையாக இருந்ததே அதற்கு எதிராக இந்தக்குரல்கள் ஏன் ஒலிக்கவில்லை???
மூன்று மணிநேர சினிமாவிற்கு இவ்வளவு எதிர்க்கும் நீங்கள்,
தமிழினம் அழியக்காரணாம இருந்த சில கட்சியிடம் , ஆளுவதற்கு தமிழ்நாட்டையே ஒப்படைக்க துடிக்கிறீர்களே!!!
இப்பொழுது எங்கே போனது உங்கள் தமிழ்ப்பற்று!

வேடதாரிகளுக்கு எதிரானது
ஒருவர் வேடத்தில் ஒரு சினிமா நடிகன் நடிப்பதால் இந்த நாடு சீரழிந்து விடாது! ஆனால் ஆளக்கூடாதவர்கள் ஆண்டால் இந்த நாடு சீரழிந்து வி டும்! இந்தப் பதிவு முத்தையா முரளிதரன்க்கு ஆதரவானது அல்ல!
சில தமிழப்பற்று வேடதாரிகளுக்கு எதிரானது!" இவ்வாறு இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











