தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், புதுவை மக்களுக்கு உதவுங்கள்! - இயக்குநர் பேரரசு

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "தமிழர்களின் பல்வேறு ஜீவாதாரப் பிரச்சினைகளில் தாமே முன்வந்து குரல் கொடுத்துள்ளது தமிழ் திரையுலகம்.
காரணம் சினிமாவை வாழவைப்பவர்கள் மக்களே. மூட்டை தூக்கும் தொழிலாளிகள்கூட கூலி பணத்தில் டிக்கெட் எடுத்து சினிமா பார்த்து திரையுலகினரை வாழ வைக்கிறார்கள்.
இன்று அந்த மக்களுக்கு சொல்லொணாத இன்னல் ஏற்பட்டுள்ளது, தானே புயலால்.
எனவே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவ வேண்டியது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரின் கடமையாகும். சினிமாவில் பல்வேறு சங்கங்கள் உள்ளன. எல்லோரும் இணைந்து எப்படி உதவலாம் என்று யோசித்து முடிவுகள் எடுக்கவேண்டும்.
நடிகர், நடிகைகளின் நட்சத்திர கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் வசூலாகும் தொகையை முதல்வரின் தானே புயல் நிவாரண நிதிக்கு வழங்கலாம். இது என் தனிப்பட்ட கருத்துதான். துறையில் உள்ள மூத்தவர்கள் இதற்கான முயற்சியை எடுத்தால், முதலஸ் ஆளாக நானே வந்து கலந்து கொள்வேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











