ஹலோ மிஸ்டர் அட்லீ.. முடிஞ்சா இதை செய்யுங்க பார்ப்போம்.. பேரரசு விட்ட சவால்

சென்னை: கோலிவுட்டின் ஃபேமஸ் இயக்குநர்களில் ஒருவராக இருந்த அட்லீ இப்போது இந்திய அளவில் பிரபலமான இயக்குநராக இருக்கிறார். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜவான் திரைப்படம் வட மாநிலங்களில் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றாலும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. இதனையடுத்து அவர் அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்குவதாக ஒரு தகவலும், அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டதாக இன்னொரு தகவலும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் அட்லீ குறித்து பேரரசு பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லீ தமிழில் முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இணைந்துவிட்டார். அவர் படங்களை காப்பி அடிக்கிறார் என்று ரசிகர்கள் விமர்சனத்தை முன்வைத்தாலும் அவரது மேக்கிங்கும், சீன்களும் நன்றாகவே இருக்கும் என்பது பெரும்பாலானோரின் கருத்து. இந்தச் சூழலில் முதன்முதலாக ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். அதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். ஷாருக்கானே படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார்.

Atlee Perarasu Jawaan

முழுக்க தமிழ் டீம்தான்: பொதுவாக கோலிவுட்டிலிருந்து பாலிவுட் செல்லும் இயக்குநர்கள் அங்கிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களை வைத்தே பணியாற்றுவார்கள். ஆனால் அட்லீயோ முழுக்க முழுக்க தொழில்நுட்ப கலைஞர்களை இங்கிருந்து அழைத்து சென்றார். அழைத்து சென்றது மட்டுமின்றி அவர்களிடமிருந்து சிறந்த வேலையை வாங்கியிருக்கிறார் என்றும் பலர் கூறினர். அனிருத்கூட இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் எண்ட்ரி ஆகி அடுத்தடுத்து சில ஹிந்தி படங்களில் கமிட்டாகியிருப்பதாக ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நயனும் இன்னொரு ஹிந்தி படத்தில் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

வசூல் மழை: ஷாருக்கானின் நடிப்பில் ஜவானுக்கு முன்னதாக வெளியான பதான் படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்தது. எனவே இந்தப் படமும் ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்க வேண்டும் என ஷாருக்கின் ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக உலகம் முழுவதும் 1125 கோடி ரூபாயை ஜவான் படம் வசூலித்திருக்கிறது. இது வேறு எந்த இந்திய படமும் செய்யாத சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. ஜவான் படத்தின் வெற்றி காரணமாக உற்சாகமடைந்த ஷாருக் மீண்டும் அட்லியுடன் இணைந்து படம் செய்யலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்களாம்.

கலவையான விமர்சனம்: வசூல் ரீதியாக ஜவான் படம் சிக்சர் அடித்தாலும் விமர்சன ரீதியாக அவுட் ஆனது. அதிலும் தமிழ் ரசிகர்கள் ஜவான் படத்தை கழுவி கழுவி ஊற்றினார்கள். எப்போதும் வேறு படங்களிலிருந்து அட்லீ காப்பி அடிப்பார் ஆனால் இதில் தன்னுடைய முந்தைய படங்களிலிருந்தே காப்பி அடித்திருக்கிறார். முக்கியமாக 10க்கும் மேற்பட்ட படங்களின் மூவி மிக்சர்தான் ஜவான் என ஓபனாக கூறினார். இருந்தாலும் வட மாநிலங்களில் ஜவான் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸே கிடைத்தது.

பேரரசு பேட்டி: இந்நிலையில் அட்லீ குறித்து பேரரசு ஓபனாக ஒரு விஷயத்தை பேசியிருக்கிறார். தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "அட்லீ பெரிய ஹீரோக்களை வைத்து தொடர்ந்து படம் இயக்கி எஸ்கேப் ஆகிவருகிறார். பெரிய ஹீரோவை வைத்து பலன் அடைவதைவிடவும் வளர்ந்து வரும் ஹீரோவை வைத்து படம் எடுக்க வேண்டும். நானும் விஜய், அஜித் படங்களை இயக்கிய பிறகு பரத்தை வைத்து பழனி படத்தை இயக்கினேன். அதேபோல் இப்போது வளர்ந்துவரும் ஹீரோவான கவினை வைத்து அட்லீ படமெடுத்து ஹிட் கொடுக்க வேண்டும். இது நான் விடும் சவால்" என்றிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X