Perarasu - எல்லோருக்கும் அட்ஜெஸ்ட் பண்ண.. நான் இளிச்சவாயனா.. தொகுப்பாளினியிடம் கேட்ட பேரரசு

சென்னை: Perarasu (பேரரசு) பட விழா ஒன்றில் கூல் சுரேஷ் வம்பிழுத்த தொகுப்பாளினியிடம் பேரரசு பேசியிருக்கும் முறை விமர்சனத்தை சந்தித்திருக்கிறது.

மன்சூர் அலிகான் ஹீரோவாக நடித்திருக்கும் சரக்கு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கூல் சுரேஷ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், 'இங்கு எல்லோருக்கும் மாலை போட்டாங்க. ஆனால் ஒருத்தவங்களை மறந்துட்டாங்க. நம்மை வரவேற்பதற்காக விதவிதமான வார்த்தைகளை கண்டுபிடித்து கான குயில் குரலில் பேசிய தொகுப்பாளினிக்கு யாராச்சும் மாலை போட்டீங்களா' என கேட்டு அருகில் இருந்த தொகுப்பாளினிக்கு திடீரென மாலை போட்டுவிட்டார்.

Director Perarasu Controversial Behaviour to Lady Anchor

கடுப்பான தொகுப்பாளினி: இதனை கொஞ்சம்கூட எதிர்பார்க்காத தொகுப்பாளினி ஐஸ்வர்யா உடனே அந்த மாலையை கோபத்துடன் எடுத்து கீழே போட்டு கூல் சுரேஷை கடுமையாக முறைத்தார். கூல் சுரேஷைத் தொடர்ந்து பேச வந்த மன்சூர் அலிகானிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப; சுரேஷ் செய்தது தப்புதான். அவர் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

அதேபோல் கூல் சுரேஷும், அந்தப் பெண்ணும் நானும் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னதாகவே பேசினோம் என கூற அதற்கு அந்தப் பெண்ணோ நான் ஒருவார்த்தைக்கூட உங்களிடம் பேசவில்லையே என சொல்ல கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்டார்.

கூல் சுரேஷின் மன்னிப்பு: அதனைத் தொடர்ந்து கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்டும், நடந்த சம்பவம் குறித்தும் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், " சரக்கு ஆடியோ வெளியீட்டு விழாவில் சில அசம்பாவிதம் நடந்துவிட்டது. அந்த தொகுப்பாளினிக்கு மாலை போட்டேன். ஆனால் பெண்ணுக்கு மாலை போடக்கூடாதாம். கலகலப்பாக இருக்க வேண்டும் என்றுதான் செயல்படுவேன். அப்படித்தான் விளையாட்டுத்தனமாக செய்தேன்.விபரீதமாகிவிட்டது. எல்லோரும் மன்னித்துவிடுங்கள்" என்றார்.

கடுப்பான ஐஸ்வர்யா: இந்த விவகாரம் குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த ஐஸ்வர்யா, 'அனைத்துக்குமே ஒரு எல்லை உண்டு. தன்னை யூட்யூப் சூப்பர் ஸ்டார் என்று சொல்லி அழைக்க வேண்டுமென என்னிடம் சொல்வார். ஆனால் நான் அப்படி சொல்லி அழைக்கமாட்டேன். அதற்காக பழி வாங்கும் முறையில் இப்படி நடந்துகொண்டார். இனி இவ்வாறு நடந்தால் ஒன்று ஓங்கி அறைந்துவிடுவேன் இல்லை காவல் துறையில் புகார் அளிப்பேன்" என்றார் காட்டமாக.

புது பஞ்சாயத்து: இந்நிலையில் ஒரு புதிய படத்தின் விழா சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியையும் ஐஸ்வர்யாவே தொகுத்து வழங்கினார். அப்போது ஒருசிலர் மைக்கில் பேசிக்கொண்டிருந்தபோது ஐஸ்வர்யா அவர்களுக்கு மைக்கை அட்ஜெஸ்ட் செய்து கொடுத்தார். அதனையடுத்து இயக்குநர் பேரரசு பேசினார்.

அப்போது மைக் சரியாக இல்லை. உடனே அந்த தொகுப்பாளினியை பார்த்து அவர் மைக்கை சரி செய்யும்படி சைகை காண்பித்துவிட்டு'எல்லோருக்கும் பண்ண நான் மட்டும் இளிச்சவாயனா'என கூறினார். அதற்கு ஒருபக்கம் எதிர்ப்பு வலுத்துக்கொண்டிருக்கிறது. மேலும் தொகுப்பாளினியிடம் எப்படி பேசுவது என்றுகூடவா பேரரசுக்கு தெரியாது என ரசிகர்கள் கேள்வி கேட்டுவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X