திரைத்துறையில் அறிமுகமாகப் போகும் பிரபல இயக்குனர் மகள்... யார் தெரியுமா...?
சென்னை : இயக்குனர், நடிகர், பாடல் ஆசிரியர் என பண்முகத் தன்மைக் கொண்டவர் இயக்குனர் பேரரசு.
இவரின் மகள் சுகிஷா, மின்மினி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக உள்ளார்.
இத்திரைப்படம் டிசம்பர் 17ந் தேதியான நாளை திரையரங்கில் வெளியாக உள்ளது.

பேரரசு
இளைய தளபதி விஜய் நடித்த திருப்பாச்சி படத்தின் மூலம், இயக்குனராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் இயக்குனர் பேரரசு. இந்த திரைப்படம் இவருக்கு மிக பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. திரையரங்குகளில் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனையும் படைத்தது.

ஊர் பெயரில்
தான் இயக்கும் திரைப்படங்களுக்கு பெரும்பாலம் ஊர்களின் பெயரை வைத்து அனைவரின் கவனத்தை கவர்ந்து. முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இவர் திகழ்ந்து வருகிறார் பேரரசு. திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி போன்ற ஒரு சில படங்களே வெற்றி பெற்ற நிலையில், பின் இவர் எடுத்த படங்கள் இவருக்கு எதிர்பாத வெற்றியை கொடுக்கவில்லை.

கௌரவ வேடத்தில்
தான் இயக்கும் திரைப்படங்களில் ஒரு சில காட்சியிலாவது கௌரவ வேடத்தில் நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். கடைசியாக இவர் 2015 ஆம் ஆண்டு 'ரூ' என்கிற படத்தை எடுத்தார் அந்த படமும் ஒரு சில காரணத்தால் இதுவரை வெளிவராமல் உள்ளது.

பேரரசுவின் மகள்
இந்நிலையில், இயக்குனர் பேரரசுவின் மகள் சுகிஷா மின்மினி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உள்ளார். அப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட்டுள்ளார்.

நாளை ரிலீஸ்
குழந்தையை மையமாக கொண்ட 'மின்மினி' திரைப்படத்திற்கு இயக்குனர் பேரரசு அனைத்து பாடல்களையும் எழுதியதுடன், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குனர் பிரபுசாலமனின் உதவியாளர் ராஜ்விக்ரம் இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார். செல்வம் பொன்னையன் தயாரித்து இருக்கிறார். இப்படம் டிசம்பர் 17ந் தேதியான நாளை வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











