அனுபவம் இல்லாத இயக்குநர்களுக்கு சான்ஸ் கொடுத்தா இப்படித்தான்.. இயக்குநர் பேரரசு ஆதங்கம்!

சென்னை: அனுபவம் இல்லாத இயக்குநர்களால் தான் தமிழ் சினிமா அழிந்து வருவதாக சமீபத்தில் நடந்த சினிமா விழாவில் இயக்குநர் பேரரசு அதிரடியாக பேசியுள்ளார்.

Recommended Video

Director Perarasu | ஊர்வசி னு பேர் பாத்ததும் தப்பா நினைக்காதிங்க | Filmibeat Tamil

நடிகர் விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் பேரரசு.

ஊர் பெயர்களை சினிமா படங்களின் டைட்டிலாக வைப்பதில் பிரபலமானவர் இயக்குநர் பேரரசு.

திருப்பாச்சி

திருப்பாச்சி

இயக்குநர் பேரரசு இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான படம் திருப்பாச்சி. விஜய், த்ரிஷா, மல்லிகா, பசுபதி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருப்பார்கள். தங்கச்சி பாசம் மற்றும் ஆக்‌ஷன் கலந்து அதிரடியாக இந்த படத்தை இயக்கி பேரரசு மிகப்பெரிய ஹிட் கொடுத்திருந்தார். கில்லி படத்தைத் தொடர்ந்து திருப்பாச்சி சூப்பர் ஹிட் அடித்தது.

டபுள் தமாக்கா

டபுள் தமாக்கா

திருப்பாச்சி ஹிட் அடித்த நிலையில், அடுத்ததாக உடனடியாக சிவகாசி படத்தையும் அதே ஆண்டு இயக்கி ஹிட் கொடுத்திருந்தார் இயக்குநர் பேரரசு. திருப்பாச்சி படத்தில் தங்கை சென்டிமென்ட் இருந்த நிலையில், சிவகாசி படத்தில் அம்மா சென்டிமென்ட் அழகாக இடம்பெற்றிருந்தது. கில்லி படத்திற்கு பிறகு மீண்டும் பிரகாஷ் ராஜ் சிவகாசி படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

அஜித் பக்கம்

அஜித் பக்கம்

விஜய்க்கு ஒரே ஆண்டில் இரு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த இயக்குநர் பேரரசு அடுத்ததாக அஜித் பக்கம் சென்று திருப்பதி படத்தை 2006ம் ஆண்டு இயக்கி வெளியிட்டார். ஆனால், அந்த படம் படு தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து, இயக்குநர் பேரரசு விஜயகாந்த், பரத், அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்களை வைத்து பழனி, தருமபுரி, திருவண்ணாமலை, திருத்தணி என ஒவ்வொரு ஊர் பெயரையும் வைத்து படம் இயக்கிய நிலையில், அத்தனை படங்களும் தோல்வியை சந்தித்தன.

3 கதைகள் இருக்கு

3 கதைகள் இருக்கு

இந்நிலையில், மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைந்து ஹிட் படம் பண்ண தான் ஆவலுடன் இருப்பதாக இயக்குநர் பேரரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறார். விஜய்க்காக 3 கதைகள் ரெடி பண்ணி வைத்திருப்பதாகவும், இன்றைய சூழலுக்கேற்ப அந்த படத்தின் கதைகள் நிச்சயம் ஹிட் அடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

அனுபவமில்லாத இயக்குநர்கள்

அனுபவமில்லாத இயக்குநர்கள்

இந்நிலையில், சமீபத்தில் சினிமா விழா ஒன்றில் பேசிய இயக்குநர் பேரரசு, இப்போதெல்லாம் ஷார்ட் பிலிம் பண்ணிட்டும், ஒரு படம், ரெண்டு படம் பண்ணிட்டும் பெரிய நடிகர்கள் படங்களை இயக்குநர்கள் இயக்குவதால் தான் தமிழ் சினிமா இப்படியொரு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார். அனுபவமில்லாத இயக்குநர்களால் தமிழ் சினிமா நாசமடைந்து வருவதாகவும் அனுபவம் வாய்ந்த இயக்குநர்களுக்கு முன்னணி நடிகர்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X