Don't Miss!
- News
"ஐஏஎஸ் ஆபீசரா அவங்க?" சேலையை தூக்கி சொருகி.. சகதிக்குள் இறங்கி.. வெள்ள மீட்பு பணியில் பெண் அதிகாரி!
- Finance
பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்.. ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு..!
- Sports
ஐபிஎல் குவாலிபையர் 2 - ராஜஸ்தான், பெங்களூரு இன்று மோதல் - பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Technology
Realme GT Neo 3 Naruto Limited Edition அறிமுகம்.. ஆரஞ்சு நிறத்தில் அட்டகாச லுக்.. எப்போ வாங்கலாம்?
- Automobiles
நடுரோட்டில் உடைந்து விழுந்த ஓலா ஸ்கூட்டர்... இதில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்குதா?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் கவனக்குறைவால் பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அந்தப் பெண்களை எல்லாம் கைது செய்யணும்... பேரரசு ஆத்திரம்
சென்னை : சமீபத்தில் பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே படத்தின் ஆடியோ -ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் பேரரசு கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பல விஷங்கள் குறித்து அவர் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார்.

இயக்குநர் பேரரசு
இயக்குநர் பேரரசு சிறப்பான பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் ரென்போ புரொடக்ஷன்ஸ் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே படத்தின் ட்ரெயிலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டார்.

ஆடியோ வெளியீடு
சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ரோபோ சங்கர் மகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அவரை பார்க்கும்போது பிகில் படத்தில நடித்த பாண்டியம்மா கேரக்டர் நினைவுக்கு வருவதாக பேரரசு பாராட்டு தெரிவித்தார்.

பெண்களால் வன்முறை
பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து அந்தப் படம் பேசுவதை சுட்டிக் காட்டிய பேரரசு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆண்களால் மட்டுமின்றி பெண்களாலும் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். டிக் டாக் மூலம் சில பெண்களின் கேவலமான செயல்பாடுகள் சகிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஜெயிலில் தள்ள வேண்டும்
குறிப்பாக இரண்டு பெண்களின் செயல்பாடுகள் மிகவும் கேவலமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ள பேரரசு, அவர்களை எல்லாம் பிடித்து ஜெயிலில் தள்ள வேண்டும் என்றும் அத்தகைய மோசமான செயல்பாடுகளை அவர்கள் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

செல்போன்களால் கலாச்சார சீர்கேடு
மேலும் நாட்டின் பல கலாச்சார சீர்கேடுகளுக்கு செல்போன்கள் காரணமாக உள்ளதாக சுட்டிக் காட்டிய அவர், இதை புரிந்து கொணடு பெற்றோர்கள் நடந்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். நம் அளவற்ற சுதந்திரம் நாட்டை கெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தண்டனை கொடுக்க வேண்டும்
தொடர்ந்து பேசிய அவர், நம்பிக்கையோடு அனுப்பி வைக்கப்படும் இடத்தில் சில ஆசிரியர்கள், நம்பிக்கையோடு வணங்கச் செல்லும் இடத்தில் சில மதகுருமார்கள் என்று பெண்கள் விஷயத்தில் யார் தவறிழைத்தாலும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

விழிப்புணர்வு வேண்டாம்
சினிமா என்பது பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த களமிறங்கினால் பொழுது போக்கு தளத்தை விட்டு சினிமா விலகி விடும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பொள்ளாச்சி சம்பவம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

வெற்றியடைய வாழ்த்து
இந்நிலையில் பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே படம் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாகி உள்ளதை சுட்டிக் காட்டிய அவர், படம் வெற்றியடையவும் தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.