உச்ச நடிகர்கள் இதை செய்யலாம்.. பலரின் உயிரை காக்கும்.. இயக்குநர் பேரரசு யோசனை!

சென்னை: உச்ச நடிகர்கள் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோக்களை வெளியிடலாம் என இயக்குநர் பேரரசு யோசனை கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் உள்ளது. கொரோனாவால் பாதிப்போரின் எண்ணிக்கையில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

இதே போல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன் எப்போதும் இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 360ஐ தாண்டியது.

பிரபலங்கள் விழிப்புணர்வு..

பிரபலங்கள் விழிப்புணர்வு..

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சினிமா பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது, முகக்கவசம் அணிவது என தங்களால் முடிந்த அளவுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

பல அர்த்தங்கள்

பல அர்த்தங்கள்

இந்நிலையில் இயக்குநர் பேரரசு உச்ச நடிகர்கள் தங்களின் ரசிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோக்களை வெளியிடலாம் என ஐடியா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் உச்சத்தில் உள்ள சில நடிகர்களின் சின்ன அசைவுக்கு கூட இங்கே பல அர்த்தங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.

ஒரு சொல்லுக்கு பல பொருள்

ஒரு சொல்லுக்கு பல பொருள்

அவர்களின் ஒரு சொல்லுகுகு பல பொருள் சொல்லப்படுகிறது. அவர்களின் ஹேர் ஸ்டைல், உடை இவற்றைக்கூட அவர்களின் லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள்.

பேரிடர் காலத்தில்

பேரிடர் காலத்தில்

இந்தக் கொரோனா பேரிடர் காலத்தில் உச்ச நடிகர்கள் தன் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் கொரோனா விழிப்புணர்வு வீடியோவோ அல்லது அறிக்கையோ வெளியிட்டால் அது நிச்சயம் மக்கள் மத்தியில் போய்ச்சேரும்.

எத்தனை கோடி கொடுத்தாலும்

பலரின் உயிர் காக்கும் செயலாகவும் அமையும்! எத்தனை கோடி நிதி கொடுத்தாலும் அதைவிட இது பயனுள்ளதாக அமையும். நன்றி வாழ்வோம்! வாழ வைப்போம்! இவ்வாறு இயக்குநர் பேரரசு பதிவிட்டுள்ளார்.

நடிகர்கள் செய்வார்களா?

நடிகர்கள் செய்வார்களா?

இதனை பார்த்த நெட்டிசன்கள், அருமையான பதிவு சம்பந்தப்பட்ட நடிகர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறி வருகின்றனர். பலரும் உச்ச நடிகர்கள் இதை செய்வார்களா என்றும் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X