twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னது அண்ணாத்த, திருப்பாச்சி படத்தின் காப்பியா... கொந்தளிக்கும் டைரக்டர் பேரரசு

    |

    சென்னை : டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி தினமான நவம்பர் 4 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் உலகம் முழுவதும் மிக அதிகமான தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது.

    ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, அபிமன்யு சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு, கொண்டாடப்பட்ட படமாக அண்ணாத்த இருந்து வருகிறது.

    அண்ணாத்த டிரைலர் சாதனையை முறியடித்த விக்ரம் கிளான்ஸ்...ஆச்சரியத்தில் ரசிகர்கள் அண்ணாத்த டிரைலர் சாதனையை முறியடித்த விக்ரம் கிளான்ஸ்...ஆச்சரியத்தில் ரசிகர்கள்

    150 கோடி வசூல்

    150 கோடி வசூல்

    அண்ணாத்த படம் ரிலீசான முதல் மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் அண்ணாத்த படத்தின் வசூல் ரூ.150 கோடியை தாண்டி விட்டது. தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் போர்டுடன் தியேட்டர்கள் நிரம்பி வருகின்றன.

    கொண்டாடும் ரசிகர்கள்

    கொண்டாடும் ரசிகர்கள்

    கிராமத்து, குடும்ப கதையாக அமைக்கப்பட்டுள்ள அண்ணாத்த படம் அதிக அளவிலான குடும்ப ரசிகர்ளை கவர்ந்து, தியேட்டரை நோக்கி வரவழைத்துள்ளது. கொரோனாவிற்கு பிறகு அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட படம் அண்ணாத்த தான். கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளிக்கு ரஜினி படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

    குவியும் மீம்கள்

    குவியும் மீம்கள்

    இந்த படம் மாறுபட்ட விமர்சனங்களை பெற்று வருகிறது. பெரும்பாலான யூட்யூப் சேனல்கள் அண்ணாத்த படத்தின் நெகடிவ் பக்கங்களை மட்டும் எடுத்துக் கூறி வருகின்றன. இதே போல் மீம் கிரியேட்டர்களும் அண்ணாத்த படத்தின் ஸ்டில்கள் மற்றும் வீடியோக்களை டிரோல் செய்து வருகின்றனர். படக்குழுவை மட்டுமல்ல, டைரக்டர் சிறுத்தை சிவாவையும் பலர் கிண்டல் செய்து வருகின்றனர்.

    திருப்பாச்சி படத்தின் காப்பியா

    திருப்பாச்சி படத்தின் காப்பியா

    இதில் ஒரு மீமில் அண்ணாத்த மற்றும் விஜய் நடித்த திருப்பாச்சி படங்களின் கதையை ஒப்பிட்டிருந்தனர். இரண்டுமே தங்கை பாசத்தை மையமாக கொண்ட கதை தான். திருப்பாச்சி கதை கிராமத்தில் இருந்து திருமணமாகி சென்னை செல்லும் கதை. அண்ணாத்த கிராமத்தில் இருந்து கொல்கத்தா செல்லும் கதை என குறிப்பிட்டுள்ளனர்.

    கடுப்பான டைரக்டர் பேரரசு

    கடுப்பான டைரக்டர் பேரரசு

    இதை பார்த்து கடுப்பான திருப்பாச்சி பட டைரக்டர் பேரரசு, கோபமாக பதிலளித்துள்ளார். அதில் அவர், ஒரு படம் என்றால் அதில் பாசிடிவ், நெகடிவ் என இரண்டும் தான் இருக்கும். ஆனால் சிலர் மிக மோசமாக கிண்டல் செய்து வருகிறார்கள். தவறான நோக்கத்துடன் நாகரீகமற்ற முறையில் விமர்சனம் செய்கிறார்கள். குறிப்பிட்ட சில யூட்யூப் சேனல்களின் விமர்சனம் தரம் தாழ்ந்ததாக உள்ளது. அண்ணாத்தாவின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி அவர்களுக்கு பதில் சொல்லும் என தெரிவித்துள்ளார்.

    English summary
    one of the meme compair rajini's annaathe with vijay's thirupachi movie storyline. after that thirupachi director perarasu wrote strong and angry statement on memems. he wrote that annaathe's box office hit will answer to them.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X