200 ரூபாய் பெருசுன்னா தியேட்டருக்கு வராதீங்க.. கங்குவா விமர்சனத்துக்கு எதிராக பொங்கிய பேரரசு!
சென்னை: நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிறுத்தை சிவா இருவரும் அமைதியாக சிரித்த முகத்துடன் சாமி தரிசனம் செய்து ரசிகர்களுடன் செல்ஃபி எல்லாம் எடுத்துக் கொண்டு ஜாலியாக கேபிள் காரில் எல்லாம் சென்று வருகின்றனர். ஆனால், சூர்யா மற்றும் சிறுத்தை சிவாவை தவிர்த்து பலரும் கங்குவா படம் நஷ்டம் ஆக காரணமே விமர்சகர்கள் தான் என்றும் ரசிகர்கள் படம் பிடிக்கவில்லை என்றால் விமர்சிக்கக் கூடாது என்கிற அளவுக்கு அதிகாரத் தோரணையுடன் பேசி வருவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சோஷியல் மீடியாவின் வளர்ச்சிக்குப் பிறகு கடுமையான விமர்சனங்கள் மற்றும் தனி மனித தாக்குதல்கள் அதிகளவில் நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், ஒரு சிறந்த படைப்பு அத்தனை விமர்சனங்களையும் உடைத்துக் கொண்டு பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்திக் கொண்டு தான் இருக்கின்றன.

200 ரூபாய் உனக்கு பெருசா தெரிந்தால் தியேட்டருக்கு முதல் நாளே படம் பார்க்க வரக்கூடாது என இயக்குநர் பேரரசு பேசியுள்ளது பலரையும் ஷாக் ஆக்கியுள்ளது. "ஏழைங்க பாழைங்க நினைச்சுப்புட்டா நாளைக்கு நீங்களும் சிஎம் தான்" என சிவகாசி படத்தில் பாட்டு எழுதினவரா இப்படி கங்குவாவுக்காக பொங்குகிறார் என விளாசி வருகின்றனர்.
200 ரூபாய் முக்கியம்னா தியேட்டருக்கு வராத: ஏற்கனவே பல ரசிகர்கள் தியேட்டர்களில் அதிக விலைக்கு விற்கப்படும் பாப்கார்ன், கூல் டிரிங்ஸ் உள்ளிட்ட திண் பண்டங்களை வாங்கிக் கொடுக்க முடியாமலும், குடும்பத்துடன் படம் பார்க்க 2000 ரூபாய் வரை செலவு ஆகிறது என்பதால், வீட்டிலேயே ஓடிடியில் படங்களை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், உன்னோட 200 ரூபாய் உனக்கு முக்கியம்னா முதல் நாளே படத்தை பார்க்க வராத என ரசிகர்களை கண்டித்துப் பேசினால் மேலும், பல ரசிகர்கள் அந்த நடிகர்களின் புதிய படங்கள் ரிலீஸ் ஆனால், தியேட்டருக்கு வருவார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
கோடிக்கணக்கில் நஷ்டம்: 200 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிட்டு முதல் நாளிலேயே படத்தை பார்த்துவிட்டு நல்லா இல்லை என விமர்சனம் கொடுக்க உங்களை யார் சொன்னது என்றும் உங்களுடைய 200 ரூபாய் வீணா போச்சுன்னா அதற்காக பல கோடி பணம் போட்டு படம் எடுப்பவர்கள் நஷ்டம் அடையணுமா? பொறுமையாக வீட்டில் உட்கார்ந்துக் கொண்டு படம் நல்லா இருக்கா? இல்லையான்னு தெரிந்துக் கொண்டு படம் பார்க்க வாங்க என ரசிகர்களை சாடி பேசியுள்ளார் பேரரசு.
விமர்சனத்துக்கு தடை விதிப்பது சரியா?: புதிய படங்களை விமர்சனம் செய்யக் கூடாது என்றும் குறிப்பாக தியேட்டரில் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்து மக்கள் கதறக் கூடாது என சொல்வதும் தியேட்டர் அருகில் கூட யூடியூப் சேனல்களை உள்ளே நுழையவிட்டு பப்ளிக் விமர்சனம் எடுக்கக் கூடாது என்று சொல்வதெல்லாம் திடீரென சூர்யா படத்துக்காக மட்டும் ஏன் இப்படி பலரும் பொங்குகின்றனர் என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
ரசிகர்கள் தான் முக்கியம்: எந்தவொரு நடிகராக இருந்தாலும் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்துவிட்டு சூப்பர் என கை தட்டி பாராட்டினால் தான் நடிகர்கள் ஹீரோக்களாகவும் ஸ்டார்களாகவும் மாறமுடியும். ஒவ்வொரு ரசிகனின் 200 ரூபாய் பணம் தான் உங்களை கோடீஸ்வரர்களாக மாற்றுகிறது என்பதை நடிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உணர வேண்டும் என்றும் கூறியுள்ளனர். ரசிகர்களை விமர்சிக்கக் கூடாது என்றும் ரசிகர்களின் 200 ரூபாய் பணத்தை ஏளனமாகவும் நினைத்து யார் பேசினாலும் நஷ்டம் அவர்களுக்குத்தான் ஏற்படும் என்றும் எச்சரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











