ரஜினிக்கு இதில் சம்பந்தமில்லை.. தனுஷ் விஷயம் குடும்ப விஷயம் மாதிரி.. பேரரசு ஆவேசம்!

சென்னை: நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் 50வது படமாக வெளியாகி உள்ள நிலையில், அந்த சந்தோஷத்தைக் கூட கொண்டாட முடியாத அளவுக்கு தயாரிப்பாளர் சங்கம் தனுஷுக்கு எதிராக ரெட் கார்டு போடுவது போல விடுத்துள்ள அறிவிப்பு தவறானது என இயக்குநர் பேரரசு தனது கருத்தை முன் வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சந்தோஷமான சூழல் திடீரென குறைந்து ஏகப்பட்ட பிரச்சனைகளும் சர்ச்சைகளும் வெடித்து வருகின்றன. அரசியல்வாதிகளின் தலையிடல் ஒரு பக்கம் இருக்கிறது என்றும் நடிகர்கள் ஆளுக்கொரு கேங்காக தங்களுக்கு தோன்றியதை எல்லாம் செய்து வருவது தான் பிரச்சனை என்றும் கூறுகின்றனர்.

Rajinikanth Dhanush Perarasu

படமே தயாரிக்காதவர்கள் எல்லாம் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்துக் கொண்டு எனக்கு தடை விதிக்க முடியுமா? என விஷால் அதிரடியாக பேசிய நிலையில், தனுஷுக்கு விடுத்துள்ள தடை எந்தளவுக்கு எடுபடும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

தவிப்பில் தயாரிப்பாளர்கள்: பெரிய நடிகர்களின் படங்களை தங்கள் நிறுவனம் பிடித்து விட வேண்டும் என அந்த நடிகருக்கு சம்பளத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி 1 கோடி சம்பளமே பெரிதாக பேசப்பட்டு வந்த நிலையில், திடீரென 100 கோடி, 200 கோடிக்கு செல்ல காரணமே தயாரிப்பாளர்கள் தான் என்கின்றனர். ஏவிஎம் உள்ளிட்ட பல தமிழ்நாட்டுத் தயாரிப்பு நிறுவனங்கள் படங்களையே தயாரிக்க முடியாமல் லைகா உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் படங்களை தயாரித்து வருகின்றன. அந்த நிறுவனங்களுக்கும் தற்போது பெரிய இழப்பு ஏற்பட்டு வரும் நிலையில், தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர்.

Rajinikanth Dhanush Perarasu

தனுஷ் விவகாரம்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராயன் படத்தை முடித்து ரிலீஸ் செய்துள்ள தனுஷ் அடுத்ததாக குபேரா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரை நம்பி சில தயாரிப்பாளர்கள் அட்வான்ஸ் கொடுத்ததாகவும் ஆனால், அவர் அந்த தயாரிப்பாளர்களுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தற்போது தனது சம்பளம் 50 கோடியை தாண்டி விட்டது என்றும் அந்த சம்பளம் கொடுத்தால் தான் நடிப்பேன் என்று ஏற்கனவே ஒப்புக் கொண்ட சம்பளத்தில் நடிக்க மறுத்து வருவதாகவும் அதன் காரணமாகவே தயாரிப்பாளர் சங்கத்தை தயாரிப்பாளர்கள் நாடியுள்ளதாகவும் கூறுகின்றனர்.

பேரரசு ஆவேசம்: தனுஷ் பெயரை தயாரிப்பாளர்கள் வெளியே சொல்லியிருக்கவே கூடாது என்றும் மீடியா முன்பாக இந்த விவகாரம் வந்திருக்கக் கூடாது என பேரரசு பொங்கியுள்ளார். தனுஷ் விவகாரம் ஒரு குடும்ப விவகாரம் போல தங்களுக்குள்ளே பேசி தீர்த்திருக்க வேண்டும் என்றும் தனுஷ் அனைவரது பேச்சையும் மதிக்கக் கூடிய நபர் என்றும் கூறியுள்ளார்.

ரஜினிக்கு இதில் சம்பந்தமில்லை: ஐஸ்வர்யா ரஜினிகாந்தை தனுஷ் பிரிந்த நிலையில், தான் தனுஷுக்கு செக் வைக்கும் விதமாக ரஜினிகாந்த் இப்படி செய்கிறாரா? என்கிற கேள்வியும் எழுந்து வரும் நிலையில், அதற்கு பதிலளித்த பேரரசு அது சுத்த பொய் ரஜினி சாருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. மேலும், அவர் அப்படி பண்ணக் கூடிய ஆள் கிடையாது என்றும் தனுஷுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையேயான பிரச்சனை தான் என்றும் சீக்கிரமே இரு தரப்பும் சுமூகமாக பேசி தீர்த்துக் கொள்வார்கள் என்றும் இயக்குநர் பேரரசு பிரஸ் மீட்டின் போது பதிலளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X