இதயம் இடிபட்டது.. ஏதோ மனம் கனத்துப்போனது.. இயக்குநர் பேரரசு உருக்கமான பதிவு!

சென்னை: சென்னையின் முக்கிய அடையாளமாக கருதப்படும் உதயம் தியேட்டர் மூடப்படுவதாக தகவல் வெளியாகி சினிமா பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்துள்ள இயக்குநர் பேரரசு உதயம் தியேட்டர் இடிக்கப்பட போவதாக வந்த செய்தியால் இதயம் இடிபட்டது.ஏதோ மனம் கனத்துப் போனது என உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அசோக் நகரில் இருக்கும் உதயம் தியேட்டர் 1983ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தியேட்டர்கள் அதிகம் இல்லாத காலகட்டத்தில் சினிமா பிரியர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது இந்த தியேட்டர். உதயம், சூரியன், சந்திரன் ஆகிய மூன்று திரைகளை கொண்ருந்த இந்த தியேட்டரில், பின் நடந்த சொத்துப் பிரச்சினை காரணமாக உதயம் தியேட்டர் இரண்டாக பிரிக்கப்பட்டு, மினி உதயம் என்ற பெயரில் கூடுதலாக ஒரு திரை சேர்க்கப்பட்டது.

director perarasu Shared about udhayam theatre memories

80 மற்றும் 90 கால கட்டத்தில், ரஜினி, கமல், விஜயகாந்த் எந்த நடிகர்கள் நடித்தாலும், முதலில் இந்த தியேட்டரில் தான் திரையிடப்படும் என்பதால், பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது, அந்த பகுதியே, திருவிழாப்போல சும்மா மிரட்டலாக இருக்கும். அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றால், கட் அவுட் வைப்பதும், பால் அபிஷேகம் செய்வது, பட்டாசு வெடிப்பது என அந்த பகுதியியே அலப்பறையாக இருக்கும்.

அப்படி சென்னை வாசிகள் வாழ்க்கையில் மறக்க முடியாத, பல காதலர்களை நினைவலையில் மூழ்கடித்த உதயம் தியேட்டர் தற்போது இடிக்கப்பட உள்ள சினிமா பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதுகுறித்து இயக்குநர் பேரரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,நான் சென்னையில் முதன்முதலாக படம் பார்த்த தியேட்டர் உதயம். பார்த்த படம் ரஜினி நடித்த படிக்காதவன். அதனை தொடர்ந்து பாண்டியராஜன் நடித்த ஆண் பாவம். அதன் பிறகு உதவி இயக்குனராக பணியாற்றிய காலகட்டங்களில் நாயகன் உட்பட அதிகப்படியான படங்களை பார்த்தது உதயம் தியேட்டரில்தான்.

நான் இயக்கிய சிவகாசி, தர்மபுரி, திருவண்ணாமலை, பழனி, திருத்தணி போன்ற அனைத்து படங்களும் உதயத்தில்தான் ரிலீஸ் ஆனது. என் இதயத்தோடு சம்பந்தப்பட்டது உதயம். இன்று உதயம் தியேட்டர் இடிக்கப்பட போவதாக வந்த செய்தியால் இதயம் இடிபட்டது.ஏதோ மனம் கனத்துப் போனது. உன் வெண்திரையில் எத்தனையோ காதல் படங்கள் ஓடியிருக்கும்,

இன்று எங்கள் மனத்திரையில் நீயே காதலாய் ஓடிக்கொண்டிருக்கிறாய்... சூரிய உதயத்திற்குத்தான் அஸ்தமனமென்றால், தியேட்டர் உதயத்திற்கும் அஸ்தமனமா? சென்னை என்றதுமே ஒருசில இடங்களை வாழ்க்கையில் மறக்கவே முடியாது.அதில் முக்கியமான ஒன்று உதயம் தியேட்டர். உதயமே! உன்மீது எந்தக் கட்டிடம் வந்தாலும் எங்கள் கண்ணுக்கு நீதான் அழியாத ஓவியமாய் தெரிவாய்.. இப்படிக்கு ரசிகன் பேரரசு" என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X