அஜித் இல்லாததால்..ரஜினி VS விஜய் பஞ்சாயத்து.. தல வந்தால் எல்லாம் சரியாகிவிடும்.. இயக்குநர் பேச்சு!

சென்னை: அஜித் இப்போது அமைதியாக இருப்பதால் தான் ரஜினி VS விஜய் பஞ்சாயத்து பெரியதாகி உள்ளது. அவர் வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என இயக்குநர் தெரிவித்துள்ளார்.

வாரிசு படம் வெளியானதில் இருந்தே ரஜினி - விஜய் ரசிகர்கள் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து வந்தது. இதற்கு பதலடி கொடுக்கும் வகையில், ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற ஹூக்கும் பாடலில் பட்டத்த பறிக்க நூறு பேரு உள்ளிட்ட அட்டாக் வரிகள் இடம் பெற்றிருந்தது.

Director Perarasu shared interesting information about Ajith and Vijay

இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெயிலர் பட ப்ரொமோஷன்களில் சரியான பதில் அடி கொடுத்திருந்தார்.

கொச்சைப்படுத்தக்கூடாது: இந்நிலையில் இயக்குநர் பேரரசு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், நான் விஜய்யை வைத்து திருப்பாச்சி படம் எடுத்தேன் அப்போதே அவர் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் கொடுத்தார். அவர் எப்போதுமே மாணவர்களுக்கு உதவி செய்து கொண்டு தான் இருக்கிறார். தற்போது அவர், மாணவர்களுக்காக செய்த உதவி அரசியலாக மாற்றிவிட்டார்கள். அவர் மாணவர்களுக்காக உதவி செய்ததை அரசியலாக்கி கொச்சைப்படுத்துகிறார்கள். அவர் இதை திடீரென செய்யவில்லை, எப்போதும் உதவி செய்து கொண்டுதான் இருக்கிறார்.

கதையில் தலையிடமாட்டார்: விஜய்யை வைத்து நான் படம் எடுத்து இருக்கிறேன், இதுவரையில் அவர் கதையிலும், வசனத்திலும் தலையிட்டது இல்லை. ஆனால், தற்போது அவர் நடிக்கும் படத்தில் அரசியல் வசனங்கள் வருவதற்கு காரணம் இயக்குநர்கள் தான். அவர் வைக்கும் வசனத்தை அவர் ஏற்றுக்கொண்டு உடன்பட்டு நடிக்கிறார்.

சூப்பர் ஸ்டார் பட்டம்: மேலும், விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பிரச்சனை நடந்து கொண்டு இருக்கிறது. 45 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருக்கும் ரஜினி, அடுத்த சூப்பர் ஸ்டார் இவர் தான் என்று அடுத்தவர்களுக்கு அந்த பட்டத்தை கொடுக்கலாம் ஆனால், மற்றவர்கள் நான் தான் சூப்பர் ஸ்டார் என்று பட்டத்தை எடுத்துக்கொள்வதில் உடன்பாடு இல்லை.

தலவந்துவிட்டால்: ரஜினி - கமல், அஜித்-விஜய் என்று பேசப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களான அது மாதிரி ரஜினி-விஜய் என்பது பேசுபொருளாகி உள்ளது. இதற்கு காரணம் அஜித் தான், அவருக்கு இப்போது இல்லை 20 வருடத்திற்கு முன்பு இருந்தே பைக் ரேஸ் மீதுதான் ஆர்வம். அவர் பணம் சம்பாதிப்பதற்காகத்தான் சினிமாவிற்கு வந்தேன் என்று பல பேட்டியில் சொல்லி இருக்கிறார். தலவந்துவிட்டால் ரஜினி-விஜய் பஞ்சாயத்து சரியாகி விடும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X