தெரிந்த முகங்களின் மரணம்: எமனின் கையில் இருப்பது பாசக்கயிறு அல்ல பாசவலை.. பிரபல இயக்குநர் உருக்கம்!

சென்னை: நாள்தோறும் தொடரும் மரணங்கள் குறித்து பிரபல இயக்குநர் உருக்கமாக கருத்து பதிவிட்டுள்ளார்.

Director Perarasu shares heartfelt statement about Corona

கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாய் நாள் தோறும் 4 ஆயிரத்தை தாண்டி வருகிறது.

தமிழகத்திலும் கொரோனா பரவலின் உச்சம் அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றால் சினிமா நட்சத்திரங்களும் அதிகளவு மரணத்தை சந்தித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாய் கொரோனா தொற்றால் சினிமா பிரபலங்கள் அதிகம் உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பிரபல இயக்குநரான பேரரசு, கொரோனா தொற்று குறித்தும் அதிகரிக்கும் உயிரிழப்பு குறித்தும் தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பகிர்ந்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது,
தினமும் தெரிந்த முகங்களின் மரணம்!
நேரில் பார்க்க முடியாத அவலம்!
கடந்து வந்த காலங்களில்
இதுவே
கொடூரமான காலம்!

தற்பொழுது
எமனின் கையில்
இருப்பது
பாசக்கயிறு அல்ல
பாசவலை!

நம்
அலட்சியமும்
பொறுப்பின்மையும்
நாம்
தற்கொலை செய்வதற்கும்,
பிறரை கொலை செய்வதற்கும்
சமமாகிவிடும்!

வாழ்வோம்!
வாழ வைப்போம்..

இவ்வாறு இயக்குநர் பேரரசு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X