இரண்டு மாதங்களாக வளர்த்த தாடி இரண்டே நிமிஷத்தில் காலி.. பிரபல இயக்குநர் கவலை!
சென்னை: தான் இரண்டு மாதங்களாக வளர்த்த தாடி இரண்டே நிமிஷத்தில் காலியாகி விட்டதாக பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவர் பேரரசு. இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் இசையமைப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.
2005ஆம் ஆண்டு வெளியான திருப்பாச்சி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

அஜித்துடன் திருப்பதி
அதனை தொடர்ந்து மீண்டும் விஜய்யை வைத்து சிவகாசி படத்தை இயக்கினார் பேரரசு. தனது மூன்றாவது படத்திலேயே அஜித்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். அஜித்தின் திருப்பதி படத்தை இயக்கிய பேரரசு, தொடர்ந்து தருமபுரி, பழனி, திருவண்ணாமலை, திருத்தணி என பல படங்களை இயக்கினார்.

எப்போதும் ஆக்ட்டிவ்
கடைசியாக கடந்த 2015ஆம் ஆண்டு சாம்ராஜ்யம் 2: சன் ஆஃப் அலெக்ஸாண்டர் என்ற படத்தை இயக்கினார் பேரரசு. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள இயக்குநர் பேரரசு, அரசியல் சார்ந்த மற்றும் சமூக நலன் சார்ந்த கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

இயக்குநரின் பதிவு
இந்நிலையில் நேற்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டதை தொடர்ந்து, தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார் இயக்குநர் பேரரசு. அவரது பதிவு பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

இரண்டு நிமிஷத்தில் காலி
அவர் பதிவிட்டிருப்பதாவது, "FATHERS DAY முன்னிட்டு
என் மகளிடம் " உனக்கு இன்னைக்கு என்ன வேண்டும் ? " என்று கேட்டேன். "மொதல்ல ஷேவ் பண்ணுங்கப்பா அது போதும்" என்று அவர் சொல்ல, இரண்டு மாதமாக வளர்த்த தாடி இரண்டு நிமிஷத்தில் காலி! என பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்ஸ் கருத்து
தன் மகள் கேட்டதும் தனது தாடியை ஷேவ் செய்துவிட்டார் இயக்குநர் பேரரசு. இயக்குநர் பேரரசு பதிவிட்டுள்ள இந்த டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் குழந்தைகள் எப்போதும் தன்னை சுற்றியிருப்பவர்களை அழகாகவும் மகிழ்ச்சியாகவும் தான் பார்க்க விரும்பும் என்பதை உணர்த்தியுள்ளது உங்கள் குழந்தை என பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











