இயக்குநர்களை முட்டாளுன்னு சொல்லாதே.. ப்ளூ சட்டை அணிந்து வந்து ப்ளூ சட்டை மாறனை எச்சரித்த பேரரசு!

சென்னை: ப்ளூ சட்டை எனும் குறும்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு ப்ளூ சட்டை அணிந்து வந்து விமர்சகர் ப்ளூ சட்டை மாறனை விளாசித் தள்ளியது பரபரப்பை கிளப்பி உள்ளது.

Recommended Video

Blue சட்டை அணிந்து வந்து Blue Sattai Maran-னை வெளுத்து வாங்கிய Perarasu

வார வாரம் வெளியாகும் புதிய படங்களை விமர்சித்து வரும் ப்ளூ சட்டை மாறன் உடன் இயக்குநர்கள் நடிகர்கள் சண்டை போட்டு வரும் நிலையில், இந்த வாரம் இயக்குநர் பேரரசு ப்ளூ சட்டை மாறன் உடன் சண்டையை ஆரம்பித்துள்ளார்.

இயக்குநர்களை முட்டாள் என சொல்ல உனக்கு உரிமை கிடையாது. விமர்சனத்தை விமர்சனமாக மட்டுமே சொல்ல வேண்டும் என எச்சரித்துள்ளார்.

பேரரசு எச்சரிக்கை

பேரரசு எச்சரிக்கை

திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, திருத்தணி, பழனி, திருவண்ணாமலை என ஊர் பெயர்களில் படங்களை இயக்கிய இயக்குநர் பேரரசு தொடர்ந்து பல சினிமா விழாக்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார். ப்ளூ சட்டை எனும் குறும்பட அறிமுக விழாவில் கலந்து கொண்ட அவர் விமர்சகர் ப்ளூ சட்டை மாறனை கடுமையாக எச்சரித்துள்ளார்.

ஒருமையில் பேசக் கூடாது

ஒருமையில் பேசக் கூடாது

பல ஆண்டுகள் உதவி இயக்குநர்களாக சினிமாவில் போராடி இயக்குநராக மாறுவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? புதிதாக படம் வந்தால் அதை பார்த்து விட்டு விமர்சனம் செய்யுங்கள் அதன் நிறை மற்றும் குறைகளை பற்றி பேசலாம் தப்பில்லை. ஆனால், அவன், இவன் என்று ஒருமையில் எப்படி பேசலாம் என பேரரசு விளாசித் தள்ளி உள்ளார்.

ப்ளூ சட்டை அணிந்து வந்து

ப்ளூ சட்டை அணிந்து வந்து

இயக்குநர் பேரரசு ப்ளூ சட்டை அணிந்து கொண்டு ப்ளூ சட்டை குறும்படத்தின் அறிமுக விழாவுக்கு வந்திருந்தார். அந்த விழாவில் ப்ளூ சட்டை மாறனை அவர் விளாசி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இரவின் நிழல் படத்தின் மூலம் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தொடர்ந்து தனது விமர்சனங்கள் முடிந்த பிறகு பார்த்திபன் பஞ்சாயத்துக்கு வருவோம் என அவர் போட்ட வீடியோக்கள் சினிமாக்காரர்களை ரொம்பவே கடுப்பாக்கி இருக்கிறது.

முட்டாள்னு எப்படி சொல்லலாம்

முட்டாள்னு எப்படி சொல்லலாம்

சினிமா படங்கள் சில ஹிட் ஆகும், சில படங்கள் தோல்வியை சந்திக்கும். அதற்காக ஒரு இயக்குநரை முட்டாள்னு எப்படி சொல்லி விமர்சிக்கலாம். ஆக்கப் பூர்வமான விமர்சனம் செய்தால் ஏற்றுக் கொள்வோம். இப்படி அசிங்கமாக பேசினால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என பொங்கி எழுந்துள்ளார் இயக்குநர் பேரரசு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X