இளையராஜா விவகாரத்தில் மூக்கை நுழைக்காதீங்க.. உங்க மத பிரச்சனைகளை பாருங்க.. அமீருக்கு பேரரசு கண்டனம்!

சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் அர்த்த மண்டபத்தில் இளையராஜாவை அனுமதிக்கவில்லை என்கிற சர்ச்சை கிளம்பிய நிலையில், அது வெறும் வதந்தி என இளையராஜாவே ட்வீட் போட்டு அறிவித்துள்ளார். இந்நிலையில், தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களுக்கு கருத்து தெரிவித்து வரும் இயக்குநர் அமீர் இளையராஜா விவகாரம் பற்றி பேசிய நிலையில், அதற்கு இயக்குநர் பேரரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உலக பிரசித்திப் பெற்ற கோயில் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இளையராஜாவுக்கு கோயில் சார்பாக மரியாதை செலுத்த கோயில் நிர்வாகிகள் அவரை அர்த்த மண்டபம் வரை அழைத்துச் சென்ற நிலையில், திடீரென அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியே வந்து நின்று சாமி தரிசனம் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

ilaiyaraaja ameer perarasu

இளையராஜாவுக்கே இந்த நிலைமையா? சனாதனம் தலைவிரித்தாடும் இந்த மண்ணில் சமத்துவம் எங்கே மலரும் என இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பேரரசு பதிலடி கொடுத்துள்ளார்.

இளையராஜா விளக்கம்: "என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்."

அமீர் கொதிப்பு: "இந்திய திருநாட்டின் பிரதமராக இருந்தாலும், தேசத்தின் முதல் குடிமகனாக இருந்தாலும், உலக அரங்கில் இசை ஞானியாக இருந்தாலும் கருவறைக்குள் அனுமதியில்லை. சனாதனம் தலைவிரித்தாடும் நாட்டில் சமத்துவம் எப்போது மலரும்? என்று அமீர் வழக்கம்போல தனது வாட்ஸப்பில் போட்ட ஸ்டேட்டஸ் தீயாக பரவியது.

பேரரசு கண்டனம்: அமீரின் இந்த வாட்ஸப் ஸ்டேட்டஸுக்கு இயக்குநர் பேரரசு கண்டனம் தெரிவித்துள்ளார். "இயக்குநர் அமீர் அவர்கள் நடக்காத ஒரு நிகழ்வுக்கு பதிவு போடுவது தேவை இல்லாத ஒன்று!. அமீர் இஸ்லாத்தில் பற்று உள்ளவர் என்பது ஊரறிந்த விஷயம். இஸ்லாத்தில் எத்தனையோ குறை இருக்கும். அதை சுட்டிக்காட்டி உங்கள் வீரத்தை காட்டுங்கள். ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் பள்ளிவாசலில் சமத்துவத்திற்கு போராடுங்கள். பின், சனாதனத்தைப் பற்றி பேசலாம்" என பேரரசு கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X