அம்பானி மகன் திருமணத்தில் ரஜினிகாந்த் போட்ட ஆட்டம்.. இயக்குநர் பேரரசு என்ன இப்படி சொல்லிட்டாரு?

மும்பை: முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட் ஆகியோரின் திருமண விழா ஜூலை மாதம் 12ஆம் தேதி பிரம்மாண்டமாக நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடனமாடினார். இது தொடர்பாக பலரும் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக இயக்குநர் பேரரசு தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும் இந்தியாவின் முதன்மை பணக்காரராக உள்ள முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட் ஆகியோரின் திருமண விழா ஜூலை 12ஆம் தேதி பிரம்மாண்டமாக நடை பெற்றது. இந்த திருமணத்தில் கலந்து கொள்ள இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பிரபலங்கள் வரவழைக்கப்பட்டனர்.

Perarasu Rajinikanth Anant Ambani

ஜாம்பவான்கள்: இந்த திருமண விழாவில் அமிதாப் பச்சன், ஷாருக்கான், அமீர் கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், கிருதி சனோன், அனன்யா பாண்டே, ஷனாயா கபூர், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, வருண் தவான், ரன்வீர் சிங், ரஜினிகாந்த், அனில் கபூர், மற்றும் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். இயக்குநர் அட்லி தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.

முன்னணி நடிகர்கள்: அதேபோல் நயன்தாரா, விக்னேஷ் சிவன், சூர்யா, ஜோதிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், நடிகர் பிருத்விராஜ் தனது மனைவியுடனும், மகேஷ் பாபு தனது மனைவியுடனும், நடிகர் யாஷ் தனது மனைவியுடனும் கலந்து கொண்டனர். மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நடனம்: திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அம்பானியின் மகனும் மணமகனுமான ஆனந்த் அம்பானியுடன் இணைந்து நடனம் ஆடினார். இந்த வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவியது. இது தொடர்பாக இணையத்தில் பலரும் பலவிதமாக கருத்து தெரிவித்து வந்தனர்.

பேரரசு: இந்நிலையில் இயக்குநர் பேரரசு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அம்பானி மகன் திருமணத்தில் நடனமாடியது தொடர்பாக விழா ஒன்றில் கலந்து கொண்டபோது பேசியுள்ளார். அதில், " சூப்பர் ஸ்டார் என்றாலும் அவரும் சாதாரண மனிதன் தானே. அவருக்கும் ஒரு ஆதங்கம் இருக்கலாம். எங்காவது ஒரு இடத்தில் சராசரி மனிதனாக வாழ ஆசைப்படலாம். அம்பானி வீட்டுக் கல்யாணத்தில் கலந்து கொண்டபோது அனைவரும் ஆடும்போது அவரும் ஆடினார். அவரும் சராசரி மனிதன் தானே. உடனே இதனை தேசக்குற்றம் என்பதுபோல் ரஜினி எப்படி ஆடலாம் எனக் கேள்வி கேட்கின்றனர். வேண்டுமானால் நீயும் போய் ஆடு!.

Perarasu Rajinikanth Anant Ambani

காட்டமான பதிலடி: ஒரு நடிகன் என்றால் எப்போதும் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டு கையில் முத்திரை வைத்துக் கொண்டு இருக்க வேண்டுமா? சில இடங்களில் அவரையும் சராசரி மனிதனாக வாழ விடுங்கள். இதையெல்லாம் விமர்சனம் செய்துகொண்டு இருக்காதீர்கள். இந்த விமர்சனங்களைப் பார்க்கும்போது ரஜினி கூனிக் குறுகுவார். நாட்டில் பல பிரச்னைகள் இருக்கு அது தொடர்பாக யாரும் பேசமாட்டார்கள்" என தனது பேச்சில் ரஜினிகாந்த நடமானடியது குறித்து விமர்சனம் செய்தவர்களுக்கு தனது காட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X