தமிழ் சினிமாவில் சதி நடக்கிறது.. இயக்குநர் எல்லாம் நடிகராகி விட்டார்கள்.. இயக்குநர் பேரரசு பேச்சு!
சென்னை: ஈ.கே.முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பார்க்' திரைப்படத்தின் இசை மட்டும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய பேரரசு தமிழ் சினிமாவில் சதி நடக்கிறது. இயக்குநர்கள் எல்லாம் நடிகர்களாகி விட்டதால், இயக்குநர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்றார்.
அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ. நடராஜ் தயாரிப்பில் ஈ.கே.முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பார்க். இப்படத்தில், தமன், ஸ்வேதா டோரத்தி, விஜித் சரவணன், பிளாக் பாண்டி, ரஞ்சனி நாச்சியார், சித்தா தர்ஷன், ஜெயந்திமாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பேரரசு பேச்சு: இந்த விழாவில் பேசிய பேரரசு, இப்போது இயக்குநர்கள் எல்லாமே நடிகர்கள் ஆகிவிட்டார்கள். இங்கே வந்திருக்கும் ஆர்.வி. உதயகுமார் இப்போது நடிகராகி விட்டார். சிங்கம் புலி இயக்குநராக இருந்தார் இப்போது அவரும் முழு நேர நடிகராகி விட்டார். இப்படி சினிமாவில் சில சூழ்ச்சி நடந்த அனைவரும் நடிகர்களாகி விட்டார்கள். சினிமாவில் தற்போது இயக்குநர்களுக்குத்தான் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
மன்மத ராசா: இந்தப் படத்தில் பாடல் எழுதியிருப்பவர் பெயர் ராசாவாம். அவர் எழுதிய பாடலைப் பார்க்கும்போது இனி அவர் மன்மத ராசா. பல கவிஞர் பெண்களின் இடையை கவர்ச்சியாக பார்ப்பார்கள் இவர் எக்ஸ் ஆக பார்த்து இருக்கிறார். அந்த அளவிற்கு அவரின் பார்வை கூர்மையாக உள்ளது.கண்ணதாசன், வைரமுத்துஎல்லாம் தத்துவ பாடலை கொடுத்து ட்யூன் போட சொல்லுவார்கள். ஆனால், ஐட்டம் பாடலுக்கு ட்யூன் போட்டவர் இந்த மன்மத ராசா.
கொழு கொழு நடிகை: இந்த படத்தின் கதாநாயகி ஸ்வேதா, கொழு கொழு என்று இருக்கிறார். அப்போதெல்லாம் ஜோதிகா, குஷ்பூ போன்றவர்கள் கொழு கொழு என்று இருப்பார்கள். பிறகெல்லாம் சிம்ரன், திரிஷா என்று இளைத்தவர்களாக இருப்பார்கள். கொழு கொழுவென இருந்தால் மக்களுக்குப் பிடிக்கும். இந்த கதாநாயகி ஸ்வேதா அப்படி இருக்கிறார். சினிமாவில் இயக்குநருக்குக் கதைப்பிடிப்பும் கதாநாயகிக்குச் சதைப்பிடிப்பும் தேவை. இந்த இரண்டாவது கதாநாயகி கன்னடத்து பைங்கிளி தமிழைக் கொஞ்சி கொஞ்சிப் பேசினார். கேட்பதற்கு அழகாக இருந்தது. நாங்கள் மொழி பேதம் பார்ப்பதில்லை. சரோஜாதேவியை எல்லாம் கன்னடத்துப் பைங்கிளி என்று கொண்டாடினோம் உங்களையும் வரவேற்போம் என்றார்


Click it and Unblock the Notifications











