கொள்கையை விட பணமா முக்கியம்? பணத்தை திருப்பி கொடுங்க.. சின்மயிக்கு பேரரசு பதிலடி!
சென்னை: திரௌபதி இரண்டாவது பாகத்தை மோகன் ஜி இயக்கி உள்ளார். இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். ஜிப்ரான் இசையில், சின்மயின் குரலில்,"எம்கோனே" என்ற பாடலை பாடி இருந்த நிலையில், மோகன் ஜி படம் என்று தெரிஞ்சிருந்தா பாடியிருக்க மாட்டேன் என நேற்று சின்மயி பதிவிட்டு இருந்தார். இதற்கு இயக்குநர் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
மோகன் ஜி இயக்கத்தில் திரௌபதி 2 திரைப்படம் உருவாகி உள்ளது. பான் இந்திய திரைப்படமாக இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி உள்ளது. இதில், திரௌபதி தேவி கதாபாத்திரத்தில் ரக்ஷனா இந்து நடித்துள்ளார். மேலும், ரிச்சர்ட் ரிஷி, நட்டி நட்ராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, தேவயானி ஷர்மா மற்றும் அருணோதயன் என பலர் நடித்துள்ளனர்.

பாடி இருக்கவே மாட்டேன்: இப்படத்திற்கு ஜிப்ரான் இசையில், சின்மயி "எம்கோனே" என்ற பாடலை பாடி இருந்தார். இந்த பாடல் நேற்று வெளியான நிலையில், பாடகி சின்மயி, தனது எக்ஸ் தளத்தில், 'எம்கோனே' பாடலை பாடியதற்காக எனது மனமார்ந்த மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன். இசையமைப்பாளர் ஜிப்ரான், 18 வருடங்களாக எனக்கு தெரியும். அவரது அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்ததால், நான் வழக்கம்போலச் சென்று பாடினேன். மோகன் ஜி படம் என்று தெரிஞ்சிருந்தால், இந்த பாடலை பாடியிருக்க மாட்டேன். ஏனென்றால் சித்தாந்தங்கள் என்னுடையவற்றுக்கு முற்றிலும் முரணாக உள்ளன என பதிவிட்டு இருந்தார்.
இயக்குநர் பேரரசு பதிலடி: சின்மயின் இந்த பதிவு இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இயக்குநர் பேரரசு இதற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். அதில், இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல சின்மயி அவர்களே, பாடுவதற்காக தாங்கள் வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்துவிட்டு உங்கள் குரலை நீக்கிவிடச் சொல்லலாம்! கொள்கையை விட பணமா முக்கியம்? இயக்குனர் திரு. மோகன் ஜி அவர்கள் வேறு ஒரு குரலை பதிவு செய்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது என பதிவிட்டுள்ளார். பலரும் பேரரசுவின் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











