ஜோதிகாவின் பேச்சை விமர்சனம் செய்வது தேவையற்றது.. வரிந்துக்கட்டியதால் வாங்கிக்கட்டிய இயக்குநர்!

சென்னை: தற்போதைய சூழலில் ஜோதிகாவின் பேச்சை விமர்சனம் செய்வது தேவையற்றது என வரிந்துக்கட்டிய இயக்குநரை நெட்டிசன்கள் உண்டு இல்லை என செய்துள்ளனர்.

Recommended Video

ஜோதிகாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. வரிந்து கட்டும் நெட்டிசன்ஸ்!

கடந்த ஒரு வாரமாக அதிகமாக செய்திகளில் அடிபட்டு வருகிறார் நடிகை ஜோதிகா. ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த விருது விழாவில் பங்கேற்ற ஜோதிகா, தஞ்சை பெருவுடையார் கோவிலை குறிப்பிட்டு பேசினார். கூடவே அங்குள்ள மருத்துவமனை பற்றியும் பேசினார்.

பள்ளிகளுக்கு கொடுக்க வேண்டும்

பள்ளிகளுக்கு கொடுக்க வேண்டும்

அங்கிருந்த மருத்துவமனைகள் மிகவும் மோசமாக இருந்தது. எந்த பராமரிப்பும் இன்றி இருந்ததால் அதன் பிறகு நான் கோவிலுக்கே போகவில்லை. கோவில்களுக்கு செலவு செய்யும் பணத்தையும் அவற்றை பராமரிக்கும் பணத்தையும் உண்டியலில் போடும் பணத்தையும் மக்கள் பள்ளிக்கூடங்களை கட்ட கொடுக்க வேண்டும் என்றார்.

கடும் கண்டனம்

கடும் கண்டனம்

ஜோதிகா இவ்வாறு பேசிய அந்த நிகழ்ச்சி அண்மையில் டிவி சேனல் ஒன்றில் ஒளிபரப்பானது. இதனால் செம கடுப்பானார்கள் நெட்டிசன்கள். தமிழ் அமைப்பினரும் இந்து அமைப்புகளும் ஜோதிகாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் ஆதரவு

இயக்குநர் ஆதரவு

ஜோதிகாவின் பேச்சுக்கு ஒரு பக்கம் எதிர்ப்பு எழுந்தாலும் மற்றொரு பக்கம் ஆதரவும் இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகை ஜோதிகாவுக்கு ஆதரவாக கருத்து கூறியிருக்கிறார் இயக்குநர் பேரரசு. நடிகை ஜோதிகாவை பற்றி இப்போது பேசுவது தேவையற்றது என கூறியுள்ளார்.

நாகரிகமற்றது

நாகரிகமற்றது

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், இருக்கும் சூழலில் ஜோதிகா அவர்களின் பேச்சை விமர்சனம் செய்வது தேவையற்றது! அவர் ஒரு இந்துவைக் கல்யாணம் செய்த பிறகும் அவரை மதக்கண்ணோட்டத்தில் பார்ப்பது நாகரிகமற்றது!
ஒரு கருத்தை பொதுவாக பேசியதை இவ்வளவு பெரிதாக்குவதும் சரியல்ல! இப்போ மாஸ்க் ரொம்ப அவசியம்! என்று கூறியுள்ளார்.

திராணி இருக்கிறதா

திராணி இருக்கிறதா


பேரரசுவின் இந்த பதிவை பார்த்த இந்த நெட்டிசன்,
ஜோதிகாவிற்கு, என் படத்தையோ என் கணவர் படத்தையோ திரையரங்கு வந்து பணம் கொடுத்து பார்ப்பதற்கு பதில், அந்த பணத்தை ம௫த்துவமனை மற்றும் கல்விக்கு செலவிடுங்கள் என்று சொல்லுவதற்கு திராணி இ௫க்கின்றதா.. என கேட்டுள்ளார்.

நம்பவே முடியல

நம்பவே முடியல

ஜோதிகா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்த நெட்டிசன், பொதுவா பேசறதை பொது இடத்துல பேசக்கூடாது என தெரிவித்துள்ளார். பேரரசுவின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன், அடடா நம்ம பேரரசா பேசுறிங்க நம்பவே முடியல என அதிருப்தி தெரிவித்துள்ளார்.

தவறுதலாக பேசியுள்ளார்

தவறுதலாக பேசியுள்ளார்

ஜோதிகா பேசியது தவறு தானே என்று கேட்ட நெட்டிசனுக்கு, இயக்குநர் பேரரசு பதிலளித்துள்ளார். அதாவது, தவறாக பேசுவது வேறு.. தவறுதலாக பேசுவது வேறு.. ஜோ தவறுதலாகப் பேசியுள்ளார்! அது மன்னிக்க கூடியதுதான்! என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X