பாட மறுத்த அனிருத்.. தற்கொலைக்கு முயற்சித்த பிக் பாஸ் ஐஸ் பட டைரக்டர்!

சோம பான ரூப சுந்தரன் திரைப்படத்தின் இயக்குனர் பொன்முடி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

பாட மறுத்த அனிருத்.. தற்கொலைக்கு முயற்சித்த டைரக்டர் பேட்டி - வைரல் வீடியோ

சென்னை: அனிருத்தை தங்களது படத்தில் பாட வைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்ததால் ஏற்பட்ட பிரச்சினையால் சோமபான ரூப சுந்தரன் பட இயக்குநர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் தமிழ்த் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பையா, பீச்சாங்கை உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் பொன்முடி. இவர் 'சோமபான ரூப சுந்தரன்' படம் மூலம் இயக்குநர் ஆகியுள்ளார். இப்படத்தில் மெர்லின் படத்தில் நடித்த விஷ்ணுப்பிரியன் நாயகனாகவும், பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

Director Ponmudi suicide attempt

மதுவால் இளைஞர் ஒருவர் வாழ்வில் சந்திக்கும் பாதிப்புகள் தான் கதைக்களம். பாதி படத்திலேயே நாயகி ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் வீட்டில் குடியேறிவிட்டதால், மீதமுள்ள அவரது காட்சிகளைப் படமாக்க படக்குழு காத்திருந்தது.

இதற்கிடையே, இப்படத்தில் பிரபல இசையமைப்பாளர் அனிருத்தைப் பாட வைப்பதற்கான முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்று வந்தது. ஆனால், மிகவும் பிஸியாக இருப்பதால், இப்படத்தில் பாட இயலாது, நிச்சயம் அடுத்த படத்தில் பாடித் தருகிறேன்' என அனிருத் மறுத்து விட்டார்.

இதுதொடர்பாக தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் இடையே பிரச்சினை உண்டானது. 90 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஒரு பாடலுக்காக படம் நின்று போனதால் இயக்குனர் பொன்முடி மனஉளைச்சலுக்கு ஆளானார்.

இதையடுத்து பொன்முடி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அளவுக்கதிகமான மாத்திரைகளைச் சாப்பிட்ட அவரை, உதவியாளர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினர்.

தற்போது வீட்டில் ஓய்வில் இருக்கும் அவர் இதுகுறித்து நம்மிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, " அனிருத்தை பாட வைப்பதாக இசையமைப்பாளர் அப்பாஸ் ரஃபி உறுதியளித்ததால் தான் நாங்கள் பட வேலையை தொடங்கினோம். ஆனால் அவர் இப்போது முடியாது என கைவிரித்துவிட்டதால் படம் நின்றுவிட்டது.

Director Ponmudi suicide attempt

இதனால் மனமுடைந்து நான் சாக முடிவெடுத்தேன். ஆனால் எனது உதவியாளர்கள் என்னை காப்பாற்றிவிட்டனர். இப்போதும் எனது உடல் நிலை மோசமாக தான் உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா என்பதே தெரியவில்லை", என வேதனை தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X