அந்த மாதிரி இல்ல.. நிறைய ஹியூமர் இருக்கும்.. விஜய் சேதுபதியின் 46வது படத்தின் இயக்குநர் தடாலடி!
சென்னை: விஜய் சேதுபதியின் 46வது படத்தில் அவரது கேரக்டர் குறித்த தகவலை கூறியிருக்கிறார் இயக்குநர் பொன்ராம்.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தனது எதார்த்தமான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என்றும் பிஸியாகவுள்ளார். அவரது நடிப்பில் லாபம், துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளீர் ஆகிய படங்கள் தயாராகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு
இந்நிலையில் விஜய் சேதுபதியின் 46வது படம் குறித்த அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் சேதுபதியின் இந்த 46வது படத்திற்கு தற்காலிகமாக VSP46 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அனுகீர்த்தியுடன் பேச்சுவார்த்தை?
இந்தப் படத்தை இயக்குநர் பொன்ராம் இயக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். இதில் ஹீரோயினாக நடிக்க நடிகை அனுகீர்த்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் மற்ற கேரக்டர்கள் குறித்தும் ஆர்ட்டிஸ்டுகளுடன் பேசப்பட்டு வருவதாக தெரிகிறது.

படப்பிடிப்பு திட்டம்
படப்பிடிப்பு திட்டம் இந்நிலையில் VSP46 படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர் குறித்தும் படம் குறித்தும் இயக்குநர் பொன்ராம் மனம் திறந்து பேசியுள்ளார். அதன்படி படப்பிடிப்பை பழனி, தேனி, தனுஷ்கோடி, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முற்றிலும் மாறுபட்டு..
மேலும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சேதுபதி படத்தில் நடித்தது போன்று இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி இருப்பார் என்றும் அவரது பாடிலாங்குவேஜ் முதல் அனைத்துமே மாறுபட்டு இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
Recommended Video

காமெடி போலீஸா?
இந்தப் படத்தில் அவரது கதாப்பாத்திரத்திற்கு அதிக ஹியூமர் கொடுக்கப்பட்டிருக்கும் என்றும் கூறியுள்ளார். விஜய் சேதுபதியின் கேரக்டர் அவருடைய ஸ்டைலிலும் தன்னுடைய ஸ்டைலிலும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய ஷெட்யூலை முடித்ததும் ஒரு மாத பிரேக்குக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











