பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு !
சென்னை : வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் உள்ளிட்ட திரைப்படங்கள் இயக்குனர் பொன்ராம் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் சீமராஜா திரைப்படத்திலும் தொடர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு படம் இயக்க பொன்ராமுக்கு சிவகார்த்திகேயன் நோ சொல்லி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டாக்டர் பட புரமோஷனில் மிக பிஸியாக இருந்து வரும் சிவகார்த்திகேயன் பொன்ராம் உடன் மீண்டும் இணைய நோ சொன்னதால் தற்பொழுது விஜய்சேதுபதியை வைத்து இயக்கி வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் காதும் காதும் வைத்தவாறு பேசப்பட்டு வருகிறது.

மெய்மறக்க வைத்துள்ளது
சில நாட்களாகவே யூட்யூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை திறந்தாலே செல்லம்மா பாடல் தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு இந்தப் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி அனைவரையும் கவர்ந்து மெய்மறக்க வைத்துள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடல் டாக்டர் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் நிலையில் இந்த படத்தை நெல்சன் இயக்கியிருக்கிறார்.

திருப்புமுனையாக அமைந்த
ரசிக்கவைக்கும் நடிப்பு, எதார்த்தமான நகைச்சுவை என அனைத்திலும் கை தேர்ந்தவராக வலம்வரும் சிவகார்த்திகேயன் ஆரம்ப காலத்தில் மெரினா, மனம் கொத்தி பறவை, எதிர் நீச்சல் உள்ளிட்ட திரைப்படங்கள் நடித்து வந்த நிலையில், சிவகார்த்திகேயன் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

அனைத்திலும் கலர்ஃபுல்லாக
இயக்குனர் பொன்ராம் இயக்கிய இந்தப் படம் சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இயக்குனர் பொன்ராமுக்கும் மிகப்பெரிய அறிமுகமாக இந்த திரைப்படம் அமைந்தது. பாடல்கள், காமெடி, ரசிக்கவைக்கும் காதல் காட்சிகள் என அனைத்திலும் கலர்ஃபுல்லாக பக்கா கமர்சியல் திரைப்படமாக வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் ரஜினிமுருகன் திரைப்படத்தில் இணைந்து அந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி சிவகார்த்திகேயன் கெரியரில் புதிய இன்னிங்சை தொடங்கியது.

மிகப்பெரிய தோல்வியாக
இவ்வாறு இரண்டு சூப்பர் ஹிட் திரைப்படங்கள் தொடர்ந்து கொடுத்த இந்த வெற்றிக் கூட்டணி மூன்றாவதாக இணைந்த திரைப்படம் சீமராஜா. முந்தைய இரண்டு படங்களை விடவும் சீமராஜா வசூல் வகையிலும் வெற்றி வகையிலும் பின்தங்கியே இருந்து அதுவரை பாக்ஸ் ஆபீஸில் கலக்கிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது.

பைனான்ஸ் பிரச்சினையில்
எனினும் பொன்ராம் அடுத்த படத்தையும் சிவகார்த்திகேயனை வைத்து இயக்க அணுகியதாகவும், அதற்கு சிவகார்த்திகேயன் இப்பொழுது வேண்டாம் கொஞ்ச நாள் போகட்டும் என சொல்லி திருப்பி அனுப்பிவிட்டாராம். இதனால் விரக்தியடைந்த இயக்குனர் பொன்ராம் தற்பொழுது சசிகுமாரை வைத்து "எம்ஜிஆர் மகன்" என்ற திரைப்படத்தை இயக்கியும் தயாரித்தும் வருகிறார். எம்ஜிஆர் மகன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முற்றிலும் முடிந்து தற்போது வெளியீட்டுக்காக காத்திருக்கின்ற நிலையில், வெளியிட முடியாமல் பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது.
Recommended Video

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில்
இதற்கிடையில் சிவகார்த்திகேயன் திரை போட்டியாளராக கருதப்படும் விஜய் சேதுபதியை வைத்து தற்பொழுது புதிய படம் ஒன்றை பொன்ராம் இயக்கி வருவதாகவும் இந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பதாகவும் காதும் காதும் வைத்தவாறு செய்திகள் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











