Ponram: வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2விற்கு தயாராகும் இயக்குநர்.. அட ஹீரோ சிவகார்த்திகேயன் இல்லையா!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அவரது கேரியரில் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். வடிவேலு காமெடியால் முன்னதாக இந்த தலைப்பு ஹிட்டடித்திருந்த நிலையில் இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது. படத்திற்கு பலமாக சிவகார்த்திகேயன் -சூரி காமெடி, ஸ்ரீதிவ்யாவின் க்யூட்னஸ், சத்யராஜ் உள்ளிட்டவர்களின் அதிரடி நடிப்பு ஆகியவை அமைந்திருந்தன.

இந்தப்படம் வெளியாகி 10 ஆண்டுகளை கடந்த நிலையில் தற்போது அடுத்ததாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 படத்திற்கான வேலைகளை இயக்குநர் பொன்ராம் துவங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

Director Ponram starts working on Varuthapadatha Valibar Sangam 2 it seems

நடிகர் சிவகார்த்திகேயன்: சின்னத்திரையில் சிறப்பாக செயல்பட்டு வந்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் மிகப்பெரிய அளவில் கை கொடுத்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தில் போஸ் பாண்டியாக அவர் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த சூழலில் அவருடன் இணைந்து சூரியும் அதகளம் செய்திருந்தார். இவர்களின் கூட்டணி தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் மாஸ் காட்டியது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் பொன்ராம். படத்திற்கு வசனம் எழுதியிருந்தார் இயக்குனர் எம் ராஜேஷ். இந்த கூட்டணியில் இந்த படம் மிகச் சிறப்பான வெற்றியை பெற்றது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம்: படத்திற்கு டி இமான் இசையமைத்திருந்த சூழலில் அனைத்து பாடல்களும் மிகச் சிறப்பான அளவில் ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஊதா கலரு ரிப்பன் உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன. படத்தில் மேலும் ஸ்ரீதிவ்யா, சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். படத்தின் கதைக்களம் சிறப்பான வகையில் கையாளப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகத்திற்கான வேலைகளை தற்போது இயக்குனர் பொன்ராம் துவங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்தப்பட வேலையை துவங்கிய பொன்ராம்: ஆனால் இந்த படத்தில் மிகப்பெரிய மாற்றமாக ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக கவின் ஹீரோவாக நடிக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது அடுத்தடுத்து மிகப்பெரிய இயக்குனர்களுடன் இணைந்து வரும் கவினுக்கு இந்த படமும் மிகச் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம்போலவே இந்தப் படமும் பேமிலி என்டர்டெயின்மெண்டாக சிறப்பாக அமையும் என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

சிவகார்த்திகேயன் திரைப்பயணம்: லோ பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். அவரை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்திய படங்களில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்கள் முக்கியமான பங்கு வகித்து வருகின்றன. அந்த வகையில் காமெடியை கைக்கொண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தார் சிவகார்த்திகேயன். தற்போது ஆக்ஷன் ஹீரோவாக தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். அவரது இந்த பயணத்திற்கு உதவிய படங்களில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய பங்களிப்பை அளித்தது. இதேபோல, கவினும் தற்போது தன்னை சிறப்பாக முன்னேற்றி வருகிறார். அவருக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 படம் மிகப்பெரிய வெற்றிக்கதவை ஓபன் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X