twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவகார்த்திகேயன் பட இயக்குனரின் பெயரில் சமூக வலைத்தளத்தில் பண மோசடி... யாரும் நம்ப வேண்டாம் !

    |

    சென்னை : நடிகர் சிவகார்த்திகேயனுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கியவர் இயக்குனர் பொன்ராம்.

    தொடர்ந்து சிவகார்த்திகேயனின் படங்களை இயக்கி வந்த இவர் இப்பொழுது சசிகுமாரை வைத்து எம்ஜிஆர் மகன் என்ற படத்தை இயக்கி உள்ளார்.

    விஜய் சேதுபதியை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வரும் இவர் இப்போது தன்னுடைய பெயரில் போலி சமூக வலைத் தள கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் பணமோசடி செய்து வருபவர்களை எச்சரித்து பதிவிட்டுள்ளார்.

    சிவகார்த்திகேயனுக்கு ஆண்குழந்தை பிறந்தது... வாழ்த்துமழையில் நனைந்த சிவா சிவகார்த்திகேயனுக்கு ஆண்குழந்தை பிறந்தது... வாழ்த்துமழையில் நனைந்த சிவா

    அடுத்தடுத்து இரண்டு படங்களில்

    அடுத்தடுத்து இரண்டு படங்களில்

    தமிழ் சினிமாவின் பிரின்ஸ் என அழைக்கப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது உச்ச நடிகராக உள்ளார். சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தபொழுது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய வெற்றி பெற்று திருப்புமுனையை ஏற்படுத்தியது. பொன்ராம் சிவகார்த்திகேயன் கூட்டணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போக அடுத்தடுத்து இரண்டு படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றினர்.

    வெற்றி கொடுக்கவில்லை

    வெற்றி கொடுக்கவில்லை

    அந்த வரிசையில் ரஜினி முருகன் படம் வெற்றி பெற அதைத் தொடர்ந்து சீமராஜா என்ற படத்தில் இணைந்து பணியாற்றியவர்களுக்கு இந்த முறை வெற்றி கை கொடுக்கவில்லை. இதற்கு மேலும் கூட்டணி அமைத்தால் செட் ஆகாது என நினைத்து இப்பொழுது சசிகுமாரை ஹீரோவாக வைத்து எம்ஜிஆர் மகன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

    போட்டியாளராக

    போட்டியாளராக

    சிவகார்த்திகேயனின் போட்டியாளராக சினிமாவில் கருதப்படும் விஜய் சேதுபதியை வைத்து புதிய திரைப்படத்தை பொன்ராம் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக VJS 46 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

    ஆக்டிவாக இல்லை

    ஆக்டிவாக இல்லை

    சமூக வலைதளங்களில் அந்த அளவிற்கு ஆக்டிவாக இல்லை என்றாலும் அவ்வப்போது தனது அடுத்த படத்தின் அப்டேட்களை குறித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இயக்குனர் பொன்ராம் தனது பெயரில் போலி கணக்குகள் தொடங்கி அதன் மூலமாக நண்பர்களுக்கு ரெக்வஸ்ட் கொடுத்து பணமோசடி செய்து வருவதாக கொந்தளித்துள்ளார்.

    யாரும் நம்ப வேண்டாம்

    யாரும் நம்ப வேண்டாம்

    மேலும் அதில் அவர் கூறியதாவது "வணக்கம் நண்பர்களே.. என் பெயரில் போலியாக பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கப்பட்டு சில பேரிடம் பணம் கேட்பதாக அறிந்தேன். யாரும் நம்ப வேண்டாம் அந்த அக்கவுண்டின் லிங்கை கீழே பதிவு செய்துள்ளேன் பிரண்ட் ரெக்வஸ்ட் வந்தால் அதை யாரும் ஏற்க வேண்டாம்.. பரிச்சயமான விவரமின்றி வரும் அழைப்புகளை ஏற்காதீர்கள்". இவ்வாறு தனது பெயரில் போலியாக கணக்குகள் தொடங்கப்பட்டு பண மோசடி நடைபெற்றுள்ளதை எச்சரித்து பதிவிட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    English summary
    Director Ponram has warned the people of fraudsters using fake IDs to cheat them.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X