பிரபு சாலமனின் காடன்.. 10 வருட கதை.. யானை தான் ஹீரோ.. செம படம்!

Recommended Video

Kaadan Official First Look | Vishnu Vishal | Rana Duggubati | Prabhu Solomon

சென்னை : பிரபு சாலமன் இயக்கி இருக்கும் திரைப்படம் காடன். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது. அந்த படத்தை பற்றி பல்வேறு தகவல்களை வெளியிட்டார்.

கண்ணோடு காண்பதெல்லாம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் இயக்குனர் பிரபு சாலமன். இதனை தொடர்ந்து கிங், கொக்கி, லீ, லாடம் போன்ற படங்களை இயக்கினார்.

 Director prabhu Solomon press meet

இந்த படங்கள் அனைத்திற்கும் பிறகு இவருக்கு ஒரு கம்பேக் ஆக அமைந்தது இவர் இயக்கிய " மைனா" திரைப்படம். ரசிகர்களிடையே இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்திற்காக தமிழக அரசின் விருதை பெற்றுள்ளார் பிரபு சாலமன்.

இதனை அடுத்து சிவாஜி பேரனும் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபுவை வைத்து கும்கி என்ற படத்தை இயக்கினார் இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதன் பின் கயல் மற்றும் தொடரி போன்ற படங்களை இயக்கியுள்ளார் பிரபு சாலமன்.

 Director prabhu Solomon press meet

தற்போது இவர் இயக்கி இருக்கும் திரைப்படம் தான் "காடன்" இத்திரைப்படம் மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தியில் "ஹாத்தி மேரே சாத்தி" என்றும் தெலுங்கில் ஆரண்யா என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தை ஏராஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது.

இப்படத்தை பற்றி பிரபு சாலமன் கூறுகையில், இப்படத்தில் ராணா, விஷ்ணு விஷால் ஹீசைன் போன்றோர் நடித்துள்ளனர். படத்தில் யானை தான் ஹீரோ யானையின் பெயர் உன்னி கிருஷ்ணன். இந்த உன்னி கிருஷ்ணணை தான் கும்கி படத்திலும் பயன்படுத்தினோம். விஷ்ணு விஷால் யானை மீது ஏறி உட்கார பல தடவை பயிற்சி எடுத்தார்.

 Director prabhu Solomon press meet

உன்னி யானையால் மட்டும் தான் இந்தியா சினிமாவில் நடிக்க முடியும் அந்த யானைக்கு தான் தகுந்த சான்றிதழ் உள்ளது. 7 அடர்ந்த காடுகளில் 200 நாட்களுக்கு மேல் இப்படத்தை படமாக்கினோம். முக்கிய காட்சிகளை தாய்லாந்து மற்றும் கேரளாவில் படமாக்கப்பட்டது.

ஜாதவ் பியான் தான் இந்த கதை அமைய காரணம் அவரை வைத்து தான் இப்படத்தை எடுத்துள்ளேன். பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கதை இதனை படமாக எடுத்துள்ளேன் என கூறினார் இயக்குனர் பிரபு சாலமன். ஏராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு இந்த படம் ஒரு சிறந்த கம்பெக் ஆக அமையும் என்று ரசூல் பூக்குட்டியின் உழைப்பு படத்திற்கு மேலும் பலம் சேர்த்தது என்றும் பேசினார் இயக்குனர் பிரபு சாலமன்.

 Director prabhu Solomon press meet

ஷாந்தனு மொய்தர இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். விழாவில் இயக்குனர் பிரபு சாலமன் மற்றும் நடிகர்கள் ராணா, விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X