பிரபு சாலமனின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும்… “டேய் தகப்பா“
சென்னை : பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமனின் மகன் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.
டேய் தகப்பா என தலைப்பு வைக்கப்பட்டுள்ள, இப்படத்தை அறிமுக இயக்குனர் கௌஷிக் ஸ்ரீ புஹர் இயக்க உள்ளார்.
இப்படத்திற்கான பூஜைகள் போடப்பட்டு புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி உள்ளன.

இயக்குனராக
தேசிய விருது பெற்ற காதல் கோட்டை திரைப்படத்தை இயக்கிய அகத்தியன் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்தவர் பிரபு சாலமன். இவர் கண்ணோடு காண்பதெல்லாம் என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.

சிறந்த இயக்குனருக்கான விருது
கிங்,லீ, லாடம், மைனா,கும்கி,கயல், தொடரி போன்ற திரைப்படங்களை எழுதி இயக்கி இருந்தார். இதில்,மைனா திரைப்படம் தமிழக அரசின் சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றுத்தந்தது. மேலும், இப்படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.

ஹீரோவாகிறார்
பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக இருக்கும் பிரபு சாலமனின் மகன் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இப்படத்திற்கு டேய் தகப்பா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கான பூஜைகள் போடப்பட்டு புகைப்படங்களை வெளியாகி உள்ளன.

பல நடிகர் நடிகைகள்
இப்படத்தை அறிமுக இயக்குனர் கௌஷிக் ஸ்ரீ புஹர் இயக்க உள்ளார். மேலும் ஆராத்யா கதாநாயகியாக நடிக்க உள்ளார். விஜய் டிவி பிரபலங்களான மதுரை முத்து, புகழ்,பப்பு, ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.


Click it and Unblock the Notifications











