twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போஸ்டர் சர்ச்சை.. வேண்டுமென்றே மஹத்தை நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்ட வைத்த இயக்குநர்!

    தெரிந்தே தான் கெபேஎந பட போஸ்டரைத் தயாரித்ததாக அதன் இயக்குநர் பிரபு ராம் சி தெரிவித்துள்ளார்.

    |

    சென்னை: மஹத் நடிக்கும் 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா' படம் ஸ்பூஃப் பாணியில் உருவாவதாக அதன் இயக்குநர் பிரபு ராம்.சி தெரிவித்துள்ளார்.

    பிக் பாஸ் வீட்டில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி மக்களிடையே அதிகம் பிரபலமானவர் நடிகர் மஹத். அவர் நாயகனாக நடிக்கும் 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா' பட போஸ்டர் கடந்த வாரம் வெளியானது.

    அதில், கையில் சிம்பு டாட்டூவுடன் காணப்படும் மஹத்திற்கு பின்புறம் பெண்கள் ஆடுவது போன்ற காட்சி அமைந்திருந்தது. அது விஷாலின் கதக்களி படப் பாடலின் ஒரு காட்சி என நெட்டிசன்கள் கண்டுபிடித்தனர். இதனால் போஸ்டரைக் கூடவா திருடுவீர்கள் என மஹத்தை அவர்கள் கலாய்த்தனர்.

    வேதாளம்:

    வேதாளம்:

    அதனைத் தொடர்ந்து மற்றொரு போஸ்டரை வெளியிட்டார் மஹத். அதில் வேதாளம் படக் காட்சியை போட்டோஷாப் செய்திருந்தார்கள். இந்த இரண்டு போஸ்டர்களையும் பார்த்த மக்கள் மனதில் குழப்பம் ஏற்பட்டது. ஏன் இப்படி வேறு பிரபல படங்களின் போஸ்டர்களை போட்டோஷாப் செய்து இந்தப் பட போஸ்டராக வெளியிடுகின்றனர் என்ற கேள்வி அவர்கள் மனதில் எழுந்தது.

    ஸ்பூஃப் படம்:

    ஸ்பூஃப் படம்:

    இந்நிலையில் இந்த போஸ்டர் சர்ச்சை குறித்து ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா' பட இயக்குநர் பிரபு ராம்.சி விளக்கமளித்துள்ளார். அதில் அவர், "இந்த படத்தில் தமிழ் சினிமாவின் பல பெரிய படங்களின் ரெஃபரன்ஸ் இருக்கும். இளைஞர்கள் மற்றும் சினிமா ரசிகர்களை கவரும் "ஸ்பூஃப்" எங்கள் படத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.

    விஷுவல் பொறி:

    விஷுவல் பொறி:

    நாங்கள் ஒரு சாதாரண போஸ்டரை கொண்டு வந்திருந்தால், எங்கள் தயாரிப்பானது பொங்கல் பெருவிழாவில் தமிழ் சினிமாவுக்கு அளிக்கப்பட்ட இன்னுமொரு பரிசாக மட்டுமே இருந்திருக்கும். இது பார்வையாளர்களுக்கு ஒரு விஷுவல் பொறியாகும்.

    பாடல் மட்டும் :

    பாடல் மட்டும் :

    போஸ்டருக்கு கிடைத்திருக்கும் வரவேற்புக்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படத்தின் வசன பகுதிகளுக்கான படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்து விட்டது, ஒரு பாடல் காட்சிப்படுத்தப்பட வேண்டி இருக்கிறது. இன்னும் 15 நாட்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    KPYND director Prabu Ram C to clarify the guessing factor placed in the poster. the director said “ If I had come up with a normal poster ,our product would’ve been another gift from Kollywood amongst the Pongal extravaganza. It is a kind of a Visual trap placed for the audience, and I'm happy with the reception”.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X