twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சட்டப்படி அடிப்பது தவறு..மனித நேயமற்ற செயல்.. கோமாளி இயக்குனர் !

    |

    சென்னை : கோமாளி பட இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் ஊரடங்கு குறித்து சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என்று எவ்வளவு கூறியும் சிலர் இரு சக்கர வாகனத்தில் ஊர் கூற்றி வருகின்றனர். இதனால் போலீசார் ஒரு சிலரை அடித்தும், தோப்புக்கரணம் போடவைத்தும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுரை கூறிவருகின்றனர்.

     Director Pradeep Ranganathan has made some comments about the curfew

    இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், விதிகளை மீறி சாலையில் சுற்றுபவர்களை கைது செய்யும் அதிகாரம் போலீசாருக்கு இருக்கிறது. ஆனால், அடிக்கும் அதிகாரம் இல்லை. சட்டப்படி அடிப்பது தவறு இதை ஏற்றுக்கொள்ள முடியாது ஏனெனில் இது மனித நேயமற்ற செயல்.

    அந்த மாதிரி சூழ்நிலையில் கைதாவதை தவிருங்கள், ஜெயிலுக்கு போவதற்கு பதிலாக இரு அடிகளை வாங்கி கொண்டு தப்பிப்பது தான் சரி, அதை விட சிறந்தது வீட்டில் இருப்பது என்று மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். மேலும் சில விஷயங்களை பகிர்ந்துள்ள பிரதீப், தான் கல்லூரி நாட்களில் இருந்தே அதிக நேரம் வீட்டில் இருப்பவன். விடுமுறை என்றால் கூட வெளியே செல்ல மாட்டேன் வீட்டில் உக்காந்து படம் பார்ப்பேன் அதனால், இந்த ஊரடங்கு எனக்கு எளிதாக உள்ளது.

     Director Pradeep Ranganathan has made some comments about the curfew

    தற்போது ஊரடங்கினால் என்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகள் 21 நாட்கள் தள்ளி போவது தான் மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த 21 நாட்களில் அதை சமன் செய்ய கதை ரீதியான வேலைகளில் எனது கவனத்தை செலுத்தி வருகிறேன். தற்போதைய சூழ்நிலையில் கணினியில் படம் டவுன்லோடு செய்வது கொஞ்சம் கடினமாக இருக்கிறது. அதனால், இசையை கற்று வருவதாக கூறியுள்ள பிரதீப், நான் இசை கற்று வருவது ஹிப்ஹாப் தமிழாவுக்கு தெரியக் கூடாது அப்படி தெரிந்தால் என்னை அவர் கிண்டல் செய்வார் என்று ஜாலியாக கூறியுள்ளார் .

    இந்த மாதிரியான இக்கட்டான நேரத்தில், அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது அதில் எந்த குறையும் இல்லை, ஆனால் நாமும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார். மேலும் சில நாட்களுக்கு முன் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அவ்வளவு கூட்டத்தை பார்த்தது வேதனை அளித்தது. அதில் அரசாங்கத்தின் தவறும் இருக்கிறது மக்கள் அந்த நேரத்தில் பயணத்தை தவிர்த்து இருக்கலாம் என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

    English summary
    Director Pradeep Ranganathan has made some comments about the curfew
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X