விடாத மழையிலும் குறையாத கூட்டம்...'லவ் டுடே' 8 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : மழை வெளுத்து வாங்கினாலும், அரங்கு நிறைந்த காட்சிகளுடன் லவ் டுடே திரைப்படம் வசூல் மழை பொழிந்து வருகிறது.

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், வெளியான படம் 'லவ் டுடே'. பிரதீப் ரங்கநாதன் இயக்குநராக மட்டுமல்லாமல், ஹீரோவாகவும் இந்த படத்தில், அறிமுகமாகியுள்ளார்.

கதாநாயகியாக இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், ரவீனா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

லவ் டுடே

லவ் டுடே

இன்றைய இளம் தலைமுறையின் காதலை அப்பட்டமாக படம் புட்டு புட்டு வைத்துள்ளது லவ் டுடே. உத்தமன் பிரதீப்பும் (பிரதீப் ரங்கநாதன்), நிகிதாவும் (இவானா) காதலிக்கிறார்கள். இவர்களின் காதல் விவகாரம் கதாநாயகியின் அப்பா சத்தியராஜுக்கு தெரிய வருகிறது. இதையடுத்து, இருவரின் போனையும் ஒரு நாள் மாறி மாறி வைத்திருக்க வேண்டும் என்று ஒரு சிறு நிபந்தனை விதிக்கிறார்.

அழகான கதை

அழகான கதை

இதையடுத்தே படத்தில் விறுவிறுப்பு கூடுகிறது. அத்தியாவசியமாகிவிட்ட செல்ஃபோன் தேவையே இல்லாத பல ரகசியங்களை வைத்திருக்கும் பெட்டியாக மாறி வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அழகாக சொல்லி இருக்கிறார். நகைச்சுவை, சென்டிமெண்டுடன் கதை அழகாக நகர்கிறது.

நல்ல விமர்சனம்

நல்ல விமர்சனம்

லவ் டுடே படத்திற்கு முதல் நாள் சுமாரான வரவேற்பு தான் கிடைத்த நிலையில், படத்தைப் பார்த்துவிட்டு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்ததால், திரையரங்கில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இந்த படத்தை கூட்டம் கூட்டாக பார்த்து வருவதால், குறைந்த திரையரங்குகளில் திரையிடப்பட்டிருந்த இப்படத்தை பல திரையரங்குகள் வாங்கி திரையிட்டனர்.

விடாத மழையில்

விடாத மழையில்

கடந்த நவம்பர் 4ம் தேதி வெளியான இப்படம் இதுவரை தமிழகத்தில் மட்டுமே ரூ. 30 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல இடங்களில் மழை வெளுத்து வாங்கி வரும் நேரத்திலும் மழையை பொருட்படுத்தாமல் மக்கள் குடும்பம் குடும்பமாக சென்று படத்தை பார்த்து வருகின்றனர். வரும் நாட்களில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

தெலுங்கில் டப் செய்யப்பட்டது

தெலுங்கில் டப் செய்யப்பட்டது

லவ்டுடே படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த படத்தை தெலுங்கில் 'டப்' செய்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம்தான், விஜய் நடித்துவரும் வாரிசு படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X