Hanuman Box office: பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய ஹனுமான்.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை: இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடித்துள்ள ஹனுமான் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. பான் இந்திய திரைப்படமாக இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானீஸ் உள்ளிட்ட உலக மொழிகளிலும் வெளியானது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயரும், வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். அப்படத்தை நேற்று தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் VFX, விஷூவல் மற்றும் சூப்பர் ஹீரோ கதை சொல்லிய இந்திய சினிமாவில் தெலுங்கு சினிமா மீண்டும் இடம்பிடித்துவிட்டது என்று ஹனுமான் படத்தை கொண்டாடினார்கள்.

Director Prasanth Varmas Hanuman Box office collection

ஹனுமான் படத்தில் கதை: கற்பனை கிராமமான அஞ்சனாத்ரி எனும் ஊரில் ஹனுமந்தா எனும் கதாபாத்திரத்தில் தேஜா நடித்துள்ளார். தனது அக்கா (அஞ்சம்மா) என்ற கேரக்‌டரில் வரலக்‌ஷ்மி சரத்குமார் நடித்துள்ளார். இருவரும் அந்த அஞ்சனாத்ரி கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். மருத்துவப் படிப்பை முடித்த அனுமனின் பால்ய தோழியான மீனாட்சி (அமிர்தா ஐயர்) இந்த ஊருக்கு வருகிறாள். அப்போது மீனாட்சியின் பேருந்தில் கொள்ளையர்கள் ஏறுகிறார்கள். அந்த நேரத்தில் அனுமன் வந்து மீனாட்சியைக் காப்பாற்றுகிறார்.

சூப்பர் ஹீரோ: அப்போது அந்த கொள்ளையர்கள் ஹனுமானை அடித்து ஆற்றில் தூக்கி வீசுகிறார்கள். ஹனுமான் தண்ணீருக்கு அடியில் மூழ்கும்போது, ​அவன் கண்ணில் முத்து ஒன்று தென்படுகிறது. ஆற்றங்கரையில் அடிக்கப்பட்ட ஹனுமானை கிராம மக்கள் வீட்டிற்கு அழைத்து காப்பாற்றுகிறார்கள். ஹனுமான் கையில் இருக்கும் முத்துவால் அனுமனின் காயங்கள் மறைந்து சூப்பர்மேன் போல் ஆகிவிடுகிறார். இந்த அபூர்வ முத்து பற்றி மைக்கேல் (வினய் ராய்)க்கு தெரியவர அதை அடைய திட்டம் போடுகிறான். இறுதியில் மைக்கேல் யார்? அவர் ஏன் இந்த முத்தை எடுக்க விரும்பினார்? சூப்பர் மேன் ஆன அனுமன் என்ன செய்தார்? என்பதை அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

முதல் நாள் வசூல்: பல மொழிகளில் நேற்று தியேட்டரில் வெளியான இத்திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஹனுமான் திரைப்படம் முதலில் நாளில் உலகளவில் ரூ.11.91 கோடியை வசூலித்துள்ளது. தெலுங்கில் ரூ.5.50 கோடியும், இந்தியில் ரூ. 2 கோடியும் இந்தப்படம் வசூலித்துள்ளது. பொங்கல் விடுமுறையையொட்டி வெளியான இத்திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், படம் மேலும் வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X