Hanuman Box office: ரூ.100 கோடியை நெருங்கும் ஹனுமான்.. 5ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்!
சென்னை: இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவான திரைப்படம் ஹனுமான். பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா ஹனுமானாக நடித்துள்ளார். பிரம்மாண்டமான பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானீஸ் உள்ளிட்ட உலக மொழிகளிலும் ஜனவரி 12ந் தேதி வெளியானது.
இப்படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார்.. இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், அனுதீப் தேவ், ஹரி கௌர, ஜெய் கிரிஷ், கிருஷ்ணா சௌரப்லு ஆகியோர் சேர்ந்து இப்படத்திற்கு இசை அமைத்துள்ளனர். இப்படத்திற்கு மக்களிடம் இருந்து நல்ல விமர்சனம் வந்து கொண்டு இருப்பதால், இப்படம் நன்றாக கல்லாக்கட்டி வருகிறது.

சூப்பர் மேன் கதை: அஞ்சனாத்ரி என்ற கிராமத்தில் தேஜா சஜ்ஜா மற்றும் வரலட்சுமியும் வசித்து வருகிறார்கள். இந்த ஊருக்கு மருத்துவப் படிப்பை முடித்த தேஜா சஜ்ஜாவின் தோழியான அமிர்தா ஐயர் ஊருக்கு வருகிறாள். அப்போது மீனாட்சியின் பேருந்தில் கொள்ளையர்கள் ஏறுகிறார்கள். அந்த நேரத்தில் அனுமன் வந்து அமிர்தா ஐயரை காப்பாற்றுகிறார். அப்போது அந்த கொள்ளையர்கள் ஹனுமானை அடித்து ஆற்றில் தூக்கி வீசுகிறார்கள். ஹனுமான் தண்ணீருக்கு அடியில் மூழ்கும்போது, அவன் கண்ணில் முத்து ஒன்று தென்படுகிறது. அந்த முத்துவால் தேஜா சஜ்ஜா சூப்பர்மேன் போல் ஆகிவிடுகிறார். இந்த அபூர்வ முத்து பற்றி வில்லன் வினய் ராய்க்கு தெரியவர அதை அடைய திட்டம் போடுகிறான். இறுதியில் யார் வென்றது என்பது தான் படத்தின் கதை.
5ம் நாள் வசூல்: படம் பார்த்த ஒவ்வொரு ரசிகரும் கிளைமாக்ஸ் 20 நிமிட காட்சி சூப்பர் என்றும், விஎஃப்எக்ஸ், பின்னணி இசை என அனைத்தும் படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளது. ஹனுமனாக நடித்த தேஜ சஜ்ஜாவின் நடிப்பை பாராட்டினார்கள். இப்படம் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் ரூ.11.91 கோடியை வசூலித்துள்ளது. தெலுங்கில் ரூ.5.50 கோடியும், இந்தியில் ரூ. 2 கோடியும் இந்தப்படம் வசூலித்துள்ளது. இரண்டாம் நாளில் ரூ 3.9 கோடியும், மூன்று மற்றும் நான்காம் நாளில் படத்தின் வசூல் 4 கோடிக்கும் மேல் இருந்தது. ஐந்தாம் தேதியான நேற்று, 12.75 கோடியை அள்ளியது. அந்த வகைகளில் ஹனுமான் படத்தின் மொத்த வசூல், ரூ 68 கோடியையாக உள்ளது. இனிவரும் நாட்களின் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications