twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அது ஒரிஜினல் பீஸ்.. நீங்க மத்தப்படத்துல இருந்து திருடலயா.. ராஜமவுலியை விளாசிய பிரபல இயக்குநர்!

    |

    சென்னை: பாராசைட் படத்தின் போது தூங்கிவிட்டதாக கூறிய இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலியை பிரபல பாலிவுட் இயக்குநர் விளாசி இருக்கிறார்.

    Recommended Video

    #RealManChallenge | RRR Director exact status | Sandeep Vanga Reddy

    கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் தென் கொரியாவின் பாராசைட் படம் 4 ஆஸ்கர் விருதுகளை குவித்தது.

    தமிழில் ஒட்டுண்ணி என அர்த்தம் கொண்ட இந்தப் படத்தில் ஏழ்மையின் பிடியில் சிக்கி தவிக்கும் ஒரு குடும்பம் பணக்கார குடும்பத்தில் ஒட்டுண்ணியாய் ஒட்டி வளர நினைப்பதே படத்தின் கதை.

    அனைத்தையும் மாற்றிய லாக்டவுன்.. குழந்தை பருவத்துக்குச் சென்ற ஹீரோயின்.. காமிக்ஸ் படிக்கிறாராம்!அனைத்தையும் மாற்றிய லாக்டவுன்.. குழந்தை பருவத்துக்குச் சென்ற ஹீரோயின்.. காமிக்ஸ் படிக்கிறாராம்!

    பாராசைட் கதை

    பாராசைட் கதை

    இதற்காக போலி சான்றிதழ்களை தயார் செய்து பணக்கார வீட்டில் வேலைக்கு சேரும் இளைஞன்,அங்கிருப்பவர்களின் வேலைக்கு வேட்டு வைத்து விட்டு, தனது குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவரையும் உள்ளே இழுத்து பணியில் அமர்த்துவார். இதன் இறுதியாக இரு குடும்பமும் பல இழப்புகளை சந்திக்கிறது.

    ஏழைகளுக்கு குரல்

    ஏழைகளுக்கு குரல்

    தென் கொரிய சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக கருதப்படும் போங் ஜூன் ஜோ, தனது படங்களின் மூலம் ஏழை மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அதைப் போலவே இந்த படத்திலும் சாதாரண ஒரு கதைக்கருவை மிக எதார்த்தமாக காட்சியாக்கி பாராட்டுக்களை பெற்றார்.

    மின்சாரக்கண்ணா

    மின்சாரக்கண்ணா

    இந்தப் படம் சிறந்த படம், சிறந்த இயக்கம், ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த வெளிநாட்டு படம் ஆகிய பிரிவுகளில் விருதுகளை குவித்தது. இருப்பினும் தமிழில் 1999ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான மின்சாரக்கண்ணா படத்தை ஒத்திருப்பதாக அப்போதே சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டன.

    பாராசைட் போரிங்

    பாராசைட் போரிங்

    இந்நிலையில் இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான எஸ் எஸ் ராஜமவுலி பாராசைட் படத்தை பார்க்கும் போது தான் தூங்கி விட்டதாக கூறினார். மேலும் படம் போரிங் என்றும் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசினார் எஸ்எஸ் ராஜமவுலி.

    ராஜமவுலிக்கு கடிதம்

    ராஜமவுலிக்கு கடிதம்

    இந்நிலையில் அவரது பேச்சுக்கு பிரபல பாலிவுட் இயக்குநரான பிரசாந்த் குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிவிட்டியுள்ள பிரசாந்த் குமார், இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். எஸ் எஸ் ராஜமவுலி பாராசைட் படம் பார்க்கும் போது போரிங் என தூங்கி விட்டதாக கூறியிருக்கிறார்.

    மரியாதைக்குரியது

    மரியாதைக்குரியது

    எல்லாவற்றையும் விட பாராசைட் படம் ஒரு ஒரிஜினல் படைப்பு.. ஒரிஜினல் எப்போதும் மரியாதைக்குரியது, குறிப்பாக மொழி தடைகளைத் தாண்டும் அளவுக்கு சக்திவாய்ந்ததாக இருக்கும்போது. பாராசைட் படம் அதைச் செய்திருக்கிறது.

    ரசனை இல்லை

    ரசனை இல்லை

    டியர் ராஜமவுலி, பாராசைட்டில் நீங்கள் எப்படி போரானீர்கள் என்பதை சமீபத்தில் படித்தேன். ஒரு இயக்குராக நீங்கள் இப்படி பேசியிருப்பது மரியாதை இல்லாததாகவும், ரசனை இல்லாததையும் காட்டுகிறது. சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்று பாராசைட் படம் வரலாறு படைத்திருக்கிறது.

    சை படத்தில்..

    சை படத்தில்..

    எல்லாவற்றிற்கும் மேலாக பாராசைட் படம் ஒரிஜினல் படைப்பு. பல மொழி தடைகளை தாண்டி வரும் போது ஒரிஜினல் படைப்புகளை மதிக்க வேண்டும். அதுதான் சினிமாவுக்கு அழகு. ஒரிஜினாலிட்டியை பற்றி பேசும்போது, உங்கள் படங்களில் பல காட்சிகளை கூறலாம். எடுத்துக்காட்டாக, சை படத்தில் மற்ற படங்களின் முழு காட்சிகளையும் அனுமதியில்லாமல் எடுத்திருக்கிறீர்கள்.

    பரஸ்பர மரியாதை..

    பரஸ்பர மரியாதை..

    சக தயாரிப்பாளர்கள் வெளியே வந்து அதைப் பற்றி பேசவில்லை. அதற்காக நீங்கள் அதை திருடவில்லை என்றில்லை. இருப்பினும் இது பரஸ்பர மரியாதை காரணமாக இருக்கிறது. ஒரு படத்தைப் பார்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட மனநிலையும் மனமும் தேவை என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஒருவேளை நீங்கள் பாராசைட் படம் பார்க்கும் போது உங்கள் மேல் ஏதோ ஒட்டுண்ணி இருந்திருக்கும் அதனால் நீங்க அந்த மனநிலையில் இல்லாமல் இருந்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

    English summary
    Director Prashanth Kumar slams SS Rajamouli for saying Parasite film is a boring movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X