என்னது கேஜிஎஃப்-3 வர 8 ஆண்டு ஆகுமா?....பிரஷாந்த் நீலுக்கு உள்ள பிரச்சினை இதுதானா?

ஐதராபாத் : கன்னடத்தில் யஷ் நடிப்பில் பிரபல இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 படங்கள் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளன.

இதையடுத்து சர்வதேச அளவில் முக்கியமான இயக்குநராக மாறியுள்ளார் பிரஷாந்த் நீல்.

தற்போது பிரபாசை வைத்து சலார் படத்தை இயக்கிவரும் அவர் அடுத்ததாக ஜூனியர் என்டிஆரின் 31வது படத்தை இயக்கவுள்ளார்.

கேஜிஎப் படங்கள்

கேஜிஎப் படங்கள்

கன்னட மொழிப் படங்கள் அதிகமாக கவனம் பெறாத சூழலில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி சர்வதேச அளவில் கவனம் பெற்றது கேஜிஎப் படம். இந்தப் படத்தை பிரஷாந்த் நீல் இயக்கியிருந்த நிலையில் யஷ் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

வசூல் சாதனையில் கேஜிஎப் 2

வசூல் சாதனையில் கேஜிஎப் 2

இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் கடந்த ஏப்ரல் 14ல் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது. இந்தப் படம் முந்தைய படத்தின் ரெக்கார்டை பீட் செய்துள்ளது. மேலும் சர்வதேச அளவில் தற்போது 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டி தொடர்ந்து வசூல் சாதனை செய்து வருகிறது.

3வது பாகம் குறித்த எதிர்பார்ப்பு

3வது பாகம் குறித்த எதிர்பார்ப்பு

இதையடுத்து படத்தின் 3வது பாகம் குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படம் ரிலீசானது முதலே இயக்குர் மற்றும் தயாரிப்பாளர்கள் இதுகுறித்த கேள்வியை எதிர்கொண்டு வருகின்றனர். முன்னதாக கேஜிஎப் சாப்டர் 3 படத்தின் வேலைகள் துவங்கியுள்ளதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்தது.

தயாரிப்பு தரப்பு ட்விஸ்ட்

தயாரிப்பு தரப்பு ட்விஸ்ட்

ஆனால் அதில் புதிய ட்விஸ்டாக கேஜிஎப் படத்தின் வேலைகள் தாமதமாகும் என்றும் சலார் படத்தின் பணிகள் நிறைவடைந்தவுடன் கேஜிஎப் 3 குறித்து திட்டமிடப்படும் என்றும் தயாரிப்பாளர் விஜய் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது கேஜிஎப் 3 படம் தாமதமாகும் என்று கூறப்படுகிறது.

சலார் படத்தில் பிசி

சலார் படத்தில் பிசி

கேஜிஎப் 2 படத்தின் ரிலீசுக்கு முன்னதாக கேஜிஎப் 3 குறித்து பேசிய பிரஷாந்த் நீல் அந்தப்படம் ரிலீசாக 8 வருடங்கள் ஆகும் என்று தெரிவித்த நிலையில், தயாரிப்பு தரப்பு வேறு மாதிரியாக பேசியது. இதனிடையே பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தின் இயக்கத்தில் பிரஷாந்த் நீல் பிசியாக உள்ளார்.

என்டிஆர் 31 பர்ஸ்ட் லுக்

என்டிஆர் 31 பர்ஸ்ட் லுக்

இந்நிலையில் இன்றைய தினம் ஜூனியர் என்டிஆர் பிறந்தநாளையொட்டி அவர் பிரஷாந்த் நீலுடன் இணையும் என்டிஆர் 31 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. பிரஷாந்த் நீல் இந்த போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஏற்கனவே பிரபாசின் சலார் படம் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

அவர் இதுவரை ஏற்காத அளவில் வன்முறைகள் அதிகமாக காணப்படும் கேரக்டரில் அவர் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூனியர் என்டிஆரின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பையும் பிரஷாந்த் நீல் தற்போது வெளியிட்டுள்ளது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த போஸ்டரில் ஜூனியர் என்டிஆர் மிகவும் தீவிரமாக ஆக்ரோஷமாக காணப்படுகிறார்.

கேஜிஎப் தயாரிப்பாளர் வாழ்த்து

கேஜிஎப் தயாரிப்பாளர் வாழ்த்து

இந்நிலையில், கேஜிஎப் படங்களின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் இந்தப் படத்திற்காக வாழ்த்துக்களை பிரஷாந்த் நீலுக்காக பகிர்ந்துள்ளார். ஆயிரம் வார்த்தைகளை ஒரு புகைப்படம் கூறிவிடும் என்றும் அவர் ஜூனியர் என்டிஆரின் இந்த போஸ்டர் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

சலார் சூட்டிங் விறுவிறு

சலார் சூட்டிங் விறுவிறு

பிரபாசின் சலார் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்திற்குள் படத்தின் சூட்டிங் நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது.

ரசிகர்கள் சந்தேகம்

ரசிகர்கள் சந்தேகம்

இந்நிலையில் அடுத்ததாக ஜூனியர் என்டிஆரின் படத்தையும் அறிவித்துள்ளார் பிரஷாந்த் நீல். இதையடுத்து கேஜிஎப் சாப்டர் 3 குறித்த அறிவிப்பு கண்டிப்பாக தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்தே முன்னதாக கேஜிஎப் 3 வெளியாக 8 ஆண்டுகள் ஆகும் என்று பிரஷாந்த் நீல் கூறினாரோ என்று ரசிகர்கள் தற்போது சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X