வாடிவாசல்.. வாடி ஆடி பார்த்திடலாம்.. வெற்றிமாறனுக்கு சவால் விட்ட இயக்குநர்.. என்ன ஆச்சு?

சென்னை: கோலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவரான சூர்யாவும், சிறந்த இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறனும் வாடிவாசல் படத்தில் இணைவார்கள் என்று கூறப்பட்டது. எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற நாவலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகவிருக்கிறது. இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் இயக்குநர் பிரவீன் காந்தி வெற்றிமாறனுக்கு சவால் விட்டிருக்கிறார்.

இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவரது முதல் படமான பொல்லாதவன் கமர்ஷியல் படமாக உருவாகியிருந்தது. ஆனால் அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய ஆடுகளம் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அள்ளியது. அந்தப் படத்திலிருந்து வெற்றிமாறன் தவிர்க்க முடியாத இயக்குநராகிவிட்டார். அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய விசாரணை, வடசென்னை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் வடசென்னை படம் வட சென்னைவாசிகளை தவறாக சித்தரித்துவிட்டதென்று விமர்சனமும் எழுந்தது. ஆனால் அதெல்லாம் இல்லை சரியாகத்தான் பேசியிருக்கிறார் என்றும் வெற்றிமாறனின் ரசிகர்கள் ஒருபக்கம் பேசினர்.

Director Praveen Gandhi Challenged to Vetrimaaran Here are the details

விடுதலை: தொடர்ந்து அவர் இயக்கிய அசுரன் படமும் தேசிய விருதை பெற்றது. அதனையடுத்து விடுதலை படத்தை இயக்கினார். இதற்கிடையே வாடிவாசல் படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்ட ப்ளானில் மாற்றம் ஏற்பட விடுதலை படமானது இரண்டு பாகங்களாக உருவானது. இதன் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

விடுதலை 2: இந்தச் சூழலில் விடுதலை படத்தின் இரண்டாம் பாக ஷூட்டிங் ஏற்கனவே முடிந்தாலும் பாகம் ஒன்று பெற்ற விமர்சனம் இதில் வரக்கூடாது என்பதற்காக படத்தில் மேலும் சில காட்சிகளை படமாக்குகிறார் வெற்றி. அதற்கான வேலைகள் மும்முரமடைந்துள்ளன. இதில் விஜய் சேதுபதிக்கு மஞ்சு வாரியர் ஜோடியாக நடிக்கலாம் என கூறப்படுகிறது. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்துவருகிறது.

வாடிவாசல்: நாவல்களையும், சிறுகதைகளையும் படமாக்கும் முயற்சியில் வெற்றிமாறன் இப்போது தீவிரமாக இறங்கியிருக்கிறார். அப்படி அவர் இயக்கிய விசாரணை, அசுரன் ஆகிய படங்கள் இந்திய அளவில் கவனம் ஈர்த்தன. அதேபோல் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற குறுநாவலை அதே பெயரிலேயே வெற்றிமாறன் படமாக்கவிருக்கிறார். சூர்யா கதாநாயகனாக நடிக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

வாடிவாசல் டெஸ்ட் ஷூட்: வாடிவாசல் படம் குறித்த அறிவிப்பு வெளியானதுமே ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர். ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் விடுதலை படத்தை இயக்க வந்துவிட்டார் வெற்றிமாறன். இதற்கிடையே தமிழ்நாடு முழுவதுமிருந்து காளைகளை வரவழைத்து டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டது. அதில் நடிகர் சூர்யா, டாணாக்காரன் இயக்குநரும், நடிகருமான தமிழ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். அந்த டெஸ்ட் ஷூட் வீடியோவே ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது.

பிரவீன் காந்தி பேட்டி: இந்நிலையில் ஜோடி, ரட்சகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பிரவீன் காந்தி வெற்றிமாறன் குறித்து பேசியிருக்கிறார். தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், "ஜோடி படத்திலேயே நான் நாடகக்காதல் குறித்து பேசியிருக்கிறேன். சினிமா வேண்டாமென்று நான் ஒதுங்கியிருக்கிறேன். என்னிடம் ஜல்லிக்கட்டு குறித்து ஒரு ஸ்க்ரிப்ட் இருக்கிறது.

அந்த ஸ்க்ரிப்ட்டில் அத்தனை வேலைகளும் முடிந்துவிட்டன. கடந்த வருடம் வெற்றிமாறனுக்கு இந்தக் கதை தொடர்பாக மெசேஜ் செய்தேன். ஆனால் அவரிடமிருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. நான் வைத்திருக்கும் ஜல்லிக்கட்டு தொடர்பான ஸ்க்ரிப்ட் அருமையாக இருக்கும். என்னை ரொம்ப உசுப்பிவிட்டால் வாடிவாசலுக்கு போட்டியாக அதை எடுத்து வாடி ஆடி பார்த்திடலாம் என்று வெற்றிமாறனுக்கு சேலஞ்ச் செய்றேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X