Trisha - த்ரிஷா மீது பொறாமைப்பட்ட சிம்ரன்?.. இயக்குநர் பகிர்ந்த சீக்ரெட்.. விவரம் உள்ளே
சென்னை: Trisha (த்ரிஷா) த்ரிஷாவை பார்த்து சிம்ரன் பொறாமைப்பட்டதாக இயக்குநர் பிரவீன் காந்தி தெரிவித்திருக்கிறார்.
ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக ஸ்க்ரீனில் தலை காட்டியவர் த்ரிஷா. அதன் பிறகு ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவான லேசா லேசா படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாகவே அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த மௌனம் பேசியதே படத்தில் நடித்து படமும் வெளியாகிவிட்டது. முதல் படத்திலேயே த்ரிஷாவின் நடிப்பும், அழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

முன்னணி நடிகை: முதல் இரண்டு படங்கள் தோல்வி அடைந்தாலும் அவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தன. பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்கள் பப்ளியான ஹீரோயினைத்தான் கொண்டாடுவார்கள் என்ற மாயையை த்ரிஷா அடித்து நொறுக்கினார். அவர் நடித்த ஒவ்வொரு படத்திலும் அழகும், திறமையும் கூடிக்கொண்டே போக த்ரிஷாவுக்கு என்று ரசிகர்களும் கூடிக்கொண்டே போனார்கள். அஜித், விஜய், ரஜினி, கமல், ஆர்யா, சூர்யா என பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டிருக்கிறார் த்ரிஷா.
லைம் லைட்டில் த்ரிஷா: ஒரு ஹீரோயினின் பீக் காலம் 10 வருடங்கள்தான் என பலரும் கணித்த நிலையில் அந்த கணிப்புகளை உடைத்த கதாநாயகியும் த்ரிஷா என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக அவர் பீக்கில் இருந்துவருகிறார். கடைசியாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகின லியோ படத்தில் நடித்தார். அடுத்ததாக அஜித் நடிக்கும் விடாமுயற்சி, கமல் நடிக்கும் தக் லைஃப் உள்ளிட்ட படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார்.
கம்பேக் த்ரிஷா: இதற்கிடையே சில வருடங்கள் த்ரிஷாவுக்கு பட வாய்ப்புகள் பெரிதாக எதுவும் இல்லாமல் இருந்தது. அந்த சூழலில்தான் பிரேம் இயக்கத்தில் 96 படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. குறிப்பாக த்ரிஷா ஏற்றிருந்த ஜானு கதாபாத்திரம் ஏகத்துக்கும் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து பொன்னியின் செல்வனில் குந்தவை கதாபாத்திரத்தை ஏற்று அதற்கும் உயிரும் அழகும் ஊட்டினார் த்ரிஷா.
பொறாமைப்பட்ட சிம்ரன்: இந்நிலையில் த்ரிஷா அறிமுகமான ஜோடி படத்தின் இயக்குநர் பிரவீன் காந்தி த்ரிஷா குறித்து பேசுகையில், "ஜோடி படத்தில் இன்னொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்களா என்று த்ரிஷாவிடம் கேட்டேன். ஆனால் அவரோ இல்லை வேண்டாம் சினிமா எப்படி இருக்கும் என்பதை பார்க்கத்தான் வந்தேன். எனக்கு இந்த ரோலே போதும் என்று சொல்லிவிட்டார்.
அதனையடுத்து சிம்ரனுக்கு அருகில் நிற்கும்படி காட்சியை எடுக்க திட்டமிட்டு த்ரிஷாவை சிம்ரன் அருகில் நிற்கவைத்தே ஃப்ரேமும் செட் செய்துவிட்டேன். அப்போது சிம்ரனோ த்ரிஷாவை கிட்டத்தட்ட 20 முறைக்கும் மேல் திரும்பி திரும்பி பார்த்தார். என்னடா இது இப்படி ஒரு அழகான பொண்ணு நிக்குது என்று பொறாமைப்படும்படிதான் அவரது பார்வை இருந்தது. பிறகு ஷாட்டை எடுத்து முடித்தோம்” என்றார்.


Click it and Unblock the Notifications











