ஏ.ஆர்.ரஹ்மான் விட்டு கொடுத்து இருக்கலாம்.. அவரால் வாழ்க்கையே போச்சு.. பிரவீன் காந்தி வேதனை!
சென்னை: ரட்சகன், ஜோடி, ஸ்டார் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் பிரவீன் காந்தி. இவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், ரட்சகன் படத்தின் போது நடந்த சுவாரசியமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். மேலும், படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை ரெடியாக உள்ளது என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
இயக்குநர் பிரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிரவீன் காந்தி, 1997ம் ஆண்டு ரட்சகன் என்ற படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகம் ஆகினார். இந்த படத்தில், நாகார்ஜுனா, சுஷ்மிதா சென் , கிரிஷ் கர்னாட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மிகப்பெரிய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த இந்த படத்திற்கு AR ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்து படத்தின் வெற்றிக்கு வழி வகுத்தது என்று சொல்லலாம்.

துள்ளல்: இந்த படத்தைத் தொடர்ந்து பிரசாந்த் சிம்ரனை வைத்து ஜோடி என்ற படத்தை கொடுத்தார். அதன் பின் ஸ்டார் என்ற படத்தை இயக்கினார் ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. பின் நீண்ட ஆண்டுகளுக்கு பின், துள்ளல் என்ற படத்தில் ஹீரோவாக பிரவீன் காந்தி நடித்திருந்தார்.
இயக்குநர் பிரவீன் காந்தி: இந்நிலையில் பேட்டி அளித்துள்ள பிரவீன் காந்தி, என் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை அமைத்து இருந்தார். அந்த நேரத்தில் அவருக்கு என்று வெறித்தனமான ரசிகர்கள் இருந்தார்கள். ரொம்பவும் சின்ன வயதிலேயே மிகப்பெரிய சாதனைகளைச் செய்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். அவருடைய கேரக்டரே நமக்கு ஆச்சர்யத்தை தரும். சுற்றி என்ன நடக்கிறது என்பதை பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் தன்னுடைய வேலை என்னவோ அதை மட்டும் செய்வார்.
நான் சினிமாவில் நிச்சயம் ஏதோ சாதிப்பேன் என்று தெரியும், ஏன் என்றால் அவ்வளவு கடுமையான உழைப்பு என்னிடம் இருந்தது. அப்படி சுறுசுறுப்பா வேலை செய்வேன், என்னை அனைவரும் பைஃயர் பாய் என்று அழைப்பார்கள் அந்த அளவிற்கு உழைப்பை கொடுத்தேன். அப்போதை கால கட்டத்திலேயே ரட்சகன் படத்தில் பான் இந்திய திரைப்படத்திற்கான அனைத்து விஷயமும் அந்த படத்தில் இருந்தது. ஆனால்,ரட்சகன் படத்திற்கு இந்தி ரைட்ஸ் கேட்டும் ஏ.ஆர்.ரஹ்மான் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார். அதை மட்டும் அவர் கொடுத்து இருந்தால், இந்தியில் பெரிய இயக்குநராக இருந்து இருப்பேன் என்றார்.
ரட்சகன் 2 கதை ரெடி: தொடர்ந்து பேசிய அவர், ரட்சகன் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான கதை தயாராக உள்ளது. கடந்த இரண்டு வருடமாக இதற்காக கதை எழுதி வைத்து இருக்கிறேன். அண்மையில் நாகார்ஜூனிடம் ரசிகர்கள் ரட்சகன் இரண்டாம் பாகம் குறித்து கேட்ட போதுதான், இது நம்ம ஆசை மட்டுமில்ல ரசிகர்களின் ஆசையும் இதுதான் என்று தெரிந்தது. இது மட்டுமில்லாமல், இந்த காலத்து இளைஞர்களுக்கு அதிரடியான ஆக்ஷன் படம் மிகவும் பிடிக்கிறது. இந்த நேரத்தில் அது போல ஒரு படத்தை பண்ணால் நல்ல ரீச் கிடைக்கும். இது குறித்து விரைவில் நாகார்ஜூனை சந்தித்து பேச இருப்பதாக கூறினார்.


Click it and Unblock the Notifications











