முதல்ல அப்பாவுக்கு விருந்து வைங்க விஜய்.. வாரிசு சர்ச்சை.. பரபரப்பை கிளப்பிய இயக்குநர் பேச்சு!

சென்னை: ரசிக மன்ற நிர்வாகிகளுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகர் விஜய் பனையூரில் பிரியாணி விருந்து வைத்தது பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் இயக்குநர் பிரவீன் காந்தி நடிகர் விஜய்க்கு வைத்த கோரிக்கை சோஷியல் மீடியாவில் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ரசிகர்களுக்கு விருந்து வைப்பது இருக்கட்டும் முதலில் அப்பாவுக்கு மரியாதை செலுத்துங்க விஜய் எனக் கூறியுள்ளார் இயக்குநர் பிரவீன் காந்தி.

அப்பா மகன் பிரச்சனை

அப்பா மகன் பிரச்சனை

நடிகர் விஜய்க்கும் அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இடையே பிரச்சனை வெடித்த நிலையில், இருவரும் நீண்ட நாட்களாக பேசிக் கொள்வதில்லை என தகவல்கள் வெளியாகின. இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரும் சில சினிமா விழாக்களில் தனது மகன் பற்றி பேசியது எல்லாம் பெரிய பிரச்சனையை கிளப்பியது. இசையமைப்பாளர் கங்கை அமரன் உள்ளிட்டோரும் விஜய் தனது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரனை மதித்து பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.

தனியாக பிறந்தநாள்

தனியாக பிறந்தநாள்

அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரின் பிறந்தநாள் விழாவில் கூட நடிகர் விஜய் கலந்து கொள்ளவில்லை. எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் இருவருமே கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகின. மேலும், யூடியூப் சேனல்களிலும் மகனுடன் ஆன பிரச்சனை குறித்தும் மனவருத்தம் குறித்தும் எஸ்.ஏ. சந்திரசேகர் வெளிப்படுத்தியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பிரியாணி விருந்து

பிரியாணி விருந்து

வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், தியேட்டர்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென தனது ரசிக மன்ற நிர்வாகிகளை வரவழைத்து பிரியாணி விருந்து போட்டிருந்தார் நடிகர் விஜய். அந்த கூட்டத்திற்கு பிறகு அரசியல் அறிவிப்பு தொடர்பாக விஜய் எதுவும் அறிக்கை வெளியிடாத நிலையில், அந்த கூட்டம் வாரிசு பட ரிலீஸ் சம்மந்தமாகவே நடைபெற்றதா? என்கிற கேள்விகள் கிளம்பின.

விவாதமான விருந்து

விவாதமான விருந்து


திடீரென நடிகர் விஜய் இப்படியொரு விருந்து வைத்திருக்கிறாரே என தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய விவாதத்தில் இயக்குநர் பிரவீன் காந்தி, கஸ்தூரி உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர். அப்போது இயக்குநர் பிரவீன் காந்தி பேசிய பேச்சு தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

அப்பாவுக்கு மரியாதை

அப்பாவுக்கு மரியாதை

ரட்சகன், ஜோடி, ஸ்டார் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பிரவீன் காந்தி அந்த விவாதத்தில் பேசும் போது, முதலில் அப்பாவுக்கு விருந்து வைங்க விஜய் என்றும், வாரிசு படத்தின் டைட்டிலுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றால், வாரிசு பட வெளியாவதற்கு முன்னதாக நடிகர் விஜய் அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரை அழைத்து மரியாதை செலுத்த வேண்டும். அப்போது தான் வாரிசு படத்தின் டைடிட்லுக்கே மரியாதை என பேசியுள்ளார்.

டைட்டிலை மாத்துங்க

டைட்டிலை மாத்துங்க

அந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்து அஜித் ரசிகர்கள் வாரிசு டைட்டிலை மாத்துங்க விஜய் என டிரெண்ட் செய்து வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து சமூக வலைதளங்களில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே கடும் மோதல் உருவாகி உள்ளது.

எஸ்.ஏ.சியே சொல்லிட்டாரு

எஸ்.ஏ.சியே சொல்லிட்டாரு

சமீபத்தில் தனது மகனுக்கும் தனக்கும் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. என் மகனை போல தங்கமான மகன் யாருமே இல்லை என எஸ். ஏ. சந்திரசேகரே பேட்டியளித்துள்ளார். அதையெல்லாம் கவனிக்காமல் இயக்குநர் பிரவீன் காந்தி ஏதோ பழைய பகையை வைத்து இப்படி பேசுகிறார் என விஜய் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X