ரஜினி இனி நடித்து என்ன பண்ணப்போறார்?.. எல்லோரையும் ஏமாத்திட்டார்.. விளாசிய இயக்குநர்
சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார் அவர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் மீது இப்போதே எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. சூழல் இப்படி இருக்க ஜோடி, ஸ்டார் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பிரவீன் காந்தி ரஜினிகாந்த் குறித்து காட்டமாக பேசியிருக்கிறார்.
பெங்களூரில் சாதாரண நடத்துநராக இருந்த ரஜினிகாந்த் இன்று பல நடிகர்களையும், சினிமாவுக்கு நடிக்க வரவிருப்பவர்களையும் வழிநடத்திக்கொண்டிருக்கிறார். எப்படியாவது ரஜினிகாந்த் ஆகிவிட வேண்டும் என்ற ஆசை நடிப்பவர்களுக்கும், நடிக்க வருபவர்களுக்கும் உள்ளுக்குள் கண்டிப்பாக இருக்கும். அந்த அளவுக்கு ரஜினி தனது தாக்கத்தை அழுத்தமாக பதித்துவிட்டார். தலைவர், தலைவர் என்று பலரால் அழைக்கப்படும் அவருக்கு இந்திய திரையுலகில் அனைவருமே ரசிகர்கள்தான்.

வேட்டையன்: கடைசியாக அவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட். இதனையடுத்து ஜெய் பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் போலி என்கவுன்ட்டரை எதிர்த்து போராடும் ரோலை ஏற்றிருப்பதாகவும்; இதில் அவர் இஸ்லாமியராக நடித்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. தனது மகள் இயக்கத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த லால் சலாம் படத்திலும் இஸ்லாமியராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லோகேஷின் கூலி: வேட்டையன் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதனையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை மெகா ஹிட்டாக கொடுத்த லோகேஷ் கூலி படத்தையும் மெகா ஹிட்டாக கொடுப்பார் என்று ரஜினிகாந்த்தின் ரசிகர்கள் இப்போதே எதிர்பார்த்திருக்கின்றனர்.
ஆன்மீக அரசியல்: இதற்கிடையே ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக இருந்தார். பல வருடங்கள் கழித்து சில வருடங்களுக்கு முன்பு அவர் தீர்க்கமான ஒரு முடிவை எடுத்தார். அதன்படி தனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்று கூறியிருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் திடீரென தனது முடிவிலிருந்து பின் வாங்கி; அரசியலுக்கு வரப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். எனவே ரசிகர்கள் ஏமாற்றமும் அடைந்தனர்.
பிரவீன் காந்தி பேட்டி: இந்நிலையில் ரட்சகன், ஜோடி, ஸ்டார் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரவீன் காந்தி ரஜினிகாந்த் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசுகையில், " ரஜினிகாந்த் ஒரு தலைவரா?.. அவர் பழைய தலைவர். இதற்கு மேலும் அவர் நடித்து என்ன பண்ணப்போகிறார். அரசியலுக்கு அவர் வந்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு அவர் ஒரு நல்ல மனிதர். அவரிடம் அவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அரசியலுக்கு வந்து அதை காட்டியிருக்க வேண்டும். அப்படி காட்டியிருந்தால் மக்களுக்கு பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்திருக்கும்.
நிலைகுலைந்து கிடக்கிறது: தமிழ்நாடு நிலைகுலைந்து கிடந்திருக்கும் இந்த நேரத்தில் ரஜினிகாந்த் ஒரு நல்ல தலைவராக இருந்திருக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்திருக்க வேண்டும். இதைத்தான் நான் அவரிடம் எதிர்பார்த்தேன். நடித்தால் மட்டும் போதும் என்று அவர் நினைக்கிறார். ஆனால் தலைவராக வந்திருக்க வேண்டும். அதை செய்ய ரஜினி தவறிவிட்டார். அத்தனை பேரையும் அவர் ஏமாற்றிவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











