தயாரிப்பாளர் சங்கத்தில் பல உள்குத்து.. முடிஞ்சா தனுஷை தொட்டுப்பாருங்க.. பிரவீன் காந்தி ஆவேசம்!
சென்னை: தமிழ் சினிமாவில் விஜய், அஜித் இவர்களுக்கு அடுத்த படியான ரேஞ்சில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். தற்போது இவர் இயக்குநராக மாறி இருக்கும் நிலையில், நடிகர் தனுஷ் குறித்தும் ராயன் படம் குறித்தும் இயக்குநர் பிரவீன் காந்தி பேட்டி அளித்துள்ளார்.
அதில், ஒரு நடிகர் இயக்குநராக மாறி இருப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறேன். பல படத்தில் நடித்த சிவாஜி கூட இயக்குநர் ஆகவில்லை. இவர் இயக்குநராக ஆகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அவர் படத்தில் அளவிற்கு மீறி வன்முறை காட்சிகள் இருக்கிறது. அப்படி படத்தில் வன்முறை இருந்தால், அது தான் மாஸ் படம் ஓடி விடும் என்று நினைக்கிறார்கள். தற்போது பல இடத்தில் வன்முறை சம்பவம் நடக்கிறது. இதற்கு காரணம் நாம் பார்க்கும் சினிமாவில் வன்முறை காட்சிகள் இருப்பதால், அதை பார்க்கும் போது மனதிற்குள் ஒரு வன்மம் வந்து விடுகிறது.

தனுஷ் குடும்பம் தான் காரணம்: 80களில் பன்னீர்புஷ்பங்கள் என்று ஒரு படம் வந்தது, 12வது படிக்கும் மாணவர்கள் பற்றி படம் அந்த படத்தில் காதல், பார்வை என்று அழகாக சொல்லி இருப்பார்கள். அப்படி கவிதை போல எடுத்து வந்த படத்தை உடைத்து துள்ளுவதோ இளமை என்ற படத்தில் தான். சினிமாவை கசகசவென ஆக்கி, அப்பனை திட்டுவது, அப்பன் முன்னாடி தண்ணி அடிப்பது, அப்பன் முன்னாடி மகன் தப்பு பண்ணுவது என்று கலாச்சார சீரழிவை சினிமாவில் முதலில் கொண்டு வந்ததே தனுஷ் குடும்பம் தான். அதில் எனக்கு மிகவும் வருத்தம் தான்.
சினிமா வன்முறையை தூண்டுகிறது: தற்போது ராயன் என்ற படத்தை எடுத்து இருக்கிறார், அந்த படத்தில் ஒரே வன்முறை தான். ஏற்கனவே யாரும் வெளியில் நடமாட முடியவில்லை. பெரிய பெரிய தலைவர்களே பயப்படுகிறார்கள், இதற்கு யார் காரணம் என்றால் சினிமாக்காரன் தான். சினிமா வன்முறையை தூண்டுகிறது, ஒரு பக்கம் சாதியை தூண்டுகிறது. ராயன் படமும் சைக்கோ தனமாக இருப்பதாக இணையத்தில் செய்தி பார்த்தேன். இதுபோன்ற வன்முறையை தூண்டும் படம் எனக்கு பிடிக்காது என்பதால் நான் படத்தை பார்க்கவில்லை.
தனுஷ் மாதிரியான திறமையானவர்கள் எம்ஜிஆர் போன்றவர்களை ரோல் மாடலாக வைத்து படத்தை எடுக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் குடியாலும், வன்முறையாலும் நாடு மோசமாகி உள்ளது. இதில் நாமும் அதே படத்தில் சொல்லக்கூடாது. இனிவரும் காலத்தில் இதுபோன்ற படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.
முடிஞ்சா தொட்டுப் பாருங்க: தொடர்ந்து பேசிய அவர், தயாரிப்பாளர் சங்கம், விஷால் மற்றும் தனுஷூக்கு கொடுத்த ரெட் கார்டு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல, இப்படி ஒரு புகார் வரும் போது நடிகர் சங்கத்தை அழைத்து பேசி இருக்க வேண்டும், அவர்களும் இதற்கு வருத்தம் தெரிவித்தால் தயாரிப்பாளர் சங்கம் எடுத்த நடிகை சரி. சினிமா நடிகர்களை நம்பி இருக்கும் போது, அவர்களுடன் நட்பாக பழகாமல் அவர்களிடம் சண்டைப்போடுவது எப்படி சரியாகும்.
பல உள் குத்துவேலைகள்: தயாரிப்பாளர் சங்கம் சொல்வது போல அந்த வேலை நிறுத்தமே நடக்காது, ஏன் என்றால் அங்கு நடப்பு சங்கம் என்று ஒரு குரூப் இருக்கிறது, இது இந்த குரூப்பை காலி பண்ண பார்க்கிறது. இந்த ரெண்டு குரூப்பையும் காலி செய்ய சேம்பர் என்கிற குரூப் ஒன்று வேலை செய்கிறது. இப்படி தயாரிப்பாளர் சங்கத்திற்குள்ளே பல உள் குத்துவேலை நடந்து கொண்டு இருக்கிறது. முடிஞ்சா தனுசை தொட்டுப்பார்க்கட்டும் என்று பிரவீன் காந்தி அந்த போட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications