வாழையை வாழ வைக்க இத்தனை சாதிக்காரர்கள் தேவைப்படுகிறார்கள்.. இயக்குநர் சர்ச்சை பேச்சு
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வாழை திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றுவரும் வாழைக்கு ரசிகர்கள் தங்களது முழு ஆதரவை தொடர்ந்து கொடுத்துவருகிறார்கள். இதன் காரணமாக பெரும்பாலான தியேட்டர்களில் இருக்கைகள் நிரம்பிவருகின்றன. இந்தச் சூழலில் வாழை குறித்து இயக்குநர் பிரவீன் காந்தி பேசியிருக்கும் விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் மாரி செல்வராஜ். தான் எடுக்கும் ஒவ்வொரு படத்துக்கும் வெவ்வேறு கதைக்களங்களுடன் வரும் அவர் அந்தக் கதைக்களங்களில் ரசிகர்களை எளிதாக உலாவ விடுகிறார்.முக்கியமாக அவரது திரைமொழி பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. இந்திய அளவில் பிரபலமான இயக்குநர் மணிரத்னம் கூட மாரி செல்வராஜின் திரை மொழியை தொடர்ந்து சிலாகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழை: மாரி செல்வராஜின் நான்காவது படைப்பாக வெளியாகியிருக்கிறது வாழை. கடந்த 23ஆம் தேதி வெளியான அந்தப் படம் ரிலீஸுக்கு முன்னதாகவே செலிபிரிட்டிகளால் கொண்டாடி தீர்க்கப்பட்டது. அதனையடுத்து ரசிகர்கள் ரிலீஸுக்கு பிறகு தியேட்டருக்கு சென்று பார்த்து தங்களது ஆதரவையும், சிரிப்பையும், கண்ணீரையும் கொடுத்துவிட்டு வந்தனர். அந்த அளவுக்கு படத்தின் ஒவ்வொரு சீனையும் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ்.
நல்ல ரெஸ்பான்ஸ்: பொதுவாக ஒரு ஆர்ட் ஃபிலிம் என்றால் அந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக மட்டும்தான் வரவேற்பு கிடைக்கும் வசூல் ரீதியாக கிடைக்காது என்ற பிம்பத்தை நொறுக்கியிருக்கிறது வாழை. இதுவரை அவர் இயக்கியிருக்கும் நான்கு படங்களுமே ஹிட்டடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக வாழை படத்தை மாரி செல்வராஜின் அடையாளமாக மாற்றியிருக்கிறார்கள் ரசிகர்களில் ஒருதரப்பினர். இதனால் மாரியும் நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் அடைந்திருக்கிறார்.
குத்தப்படும் முத்திரை: ஒருபக்கம் மாரி செல்வராஜை பலரும் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் ஒருதரப்பினரோ அவரை இன்னமும் சாதிய வட்டத்துக்குள் நிறுத்தி ஏதேதோ முத்திரை குத்தி வருகிறார்கள். ஆனால் இயக்குநர்களை பொறுத்தவரை மாரியை அள்ளி அணைத்து கொஞ்சி வருகிறார்கள். படம் பார்த்த பாலா சோகத்தின் உச்சிக்கே சென்று மாரியின் கைகளை பிடித்து அமைதியாக அமர்ந்திருந்தார். நடிகர் சூரியோ மாரி செல்வராஜை கட்டி அணைத்து முத்த மழையில் நனைய வைத்துவிட்டார். இப்படி இண்டஸ்ட்ரியில் மாரியின் தாக்கம் அதிகரிக்கவே செய்திருக்கிறது.
பிரவீன் காந்தி பேச்சு: இந்நிலையில் தொடர்ந்து பா.இரஞ்சித், மாரி செல்வராஜ் மீது விமர்சனத்தை முன்வைத்து வரும் இயக்குநர் பிரவீன் காந்தி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், "வாழையை வாழ வைக்க பாலா என்ற தேவர், நெல்சன் என்ற கிறிஸ்தவர், சிம்பு என்ற உடையார், மிஷ்கின் என்ன சாதி என்று தெரியவில்லை. அவர் ஒரு புது சாதி என எத்தனை சாதிக்காரர்கள் தேவைப்படுகிறார்கள் பாருங்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பேச்சை பார்த்த ரசிகர்களோ பிரவீன் காந்திக்கு என்ன ஆச்சு; அவர்கள் எல்லாம் படைப்பாளிகள்; அவர்களை ஏன் இவர் சாதிய வட்டத்துக்குள் நிறுத்துகிறார் என்று கேள்வி கேட்டு கடுமையாக ட்ரோல் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











