ரஜினியை முடிஞ்சா தொட்டுப்பாரு.. அவரு கழுகு தான்.. இயக்குநர் பிரவீன் காந்தி ஆவேசம்!

சென்னை: ஜெயிலர் படத்தின் வெற்றியின் மூலம் முடிஞ்சா என்னை தொட்டுப்பாரு என ரஜினி சொல்லாமல் சொல்லிவிட்டதாக இயக்குநர் பிரவீன் காந்தி பேட்டியில் கூறியுள்ளார்.

நீண்ட நாளைக்கு பிறகு ரஜினியின் படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் வழங்கி பல கோடி லாபத்தை பார்த்து வருகிறது.

பீஸ்ட் படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் கிடைத்த நிலையில் இந்தப் படம் நெல்சனுக்கு கம்பேக் படமாக அமைந்துள்ளது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Director Praveen Gandhi talks about the success of Rajinikanth starrer Jailer

பிரவீன் காந்தி பேட்டி: இந்நிலையில்,ரட்சகன், ஜோடி, ஸ்டார், துள்ளல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பிரவீன் காந்தி ஜெயிலர் படம் வெற்றி பெற்றது குறித்து யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், எந்த பக்கம் திரும்பினாலும், ரசிகர்கள் ரஜினியின் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். இந்த வயதிலும் படம் பார்ப்பவர்களுக்கும் எனர்ஜி தரக்கூடியவராக ரஜினிகாந்த் இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில், மூனாவதா ஒருத்தன் வந்து இருப்பானே என்று, ரஜினி ஒரு பெர்பாமன்ஸ் பண்ணி இருப்பாரு, அதை எந்த நடிகராலுமே பண்ணவே முடியாது.

கொண்டாடும் ரசிகர்கள்: ரஜினியின் 48 வருட ஆளுமையை அந்த ஒரு காட்சியில் காட்டி இருப்பார். இதை இன்றைய தலைமுறை கொண்டாடுவதற்கு காரணம். இது போன்ற ஒரு நடிப்பை இன்றைய 2கே கிட்ஸ்கள் இதுவரை பார்க்காததால், இப்படிக்கூட நடிக்கலாமா என வியந்து பார்த்து வருகின்றனர். இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு இப்போது தான் சினிமானா என்ன, ரஜினி யாரு என்பது தெரிகிறது.

1500 கோடி வசூல்: ரஜினியின் கேரியரில் மட்டுமில்லாமல், தமிழ் சினிமாவின் கேரியரில் ஒரு படம் இவ்வளவு பெரிய ஒரு வசூலை குவிக்குமா என மிரண்டு போகும் அளவுக்கு ஜெயிலர் படம் உலக அளவில் ஆயிரத்தில் இருந்து ஆயிரத்து 500 கோடியை நிச்சயம் வசூல் செய்யும். ஏன் என்றால் ஜெயிலர் படத்திற்குள் மிகப்பெரிய சக்தி ஏதோ இருக்கிறது.

என்னைக்குமே கழுகு ரஜினி தான்: மேலும், சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு தகுதியானவர் ரஜினி தான் என்று விஜய்க்கு நன்றாக தெரியும். அஜித் மற்றும் விஜய் இருவருக்குமே ரஜினிகாந்த் மீது மிகுந்த அன்பு உண்டு. விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் நினைப்பதால், விஜய்யும் அந்த பட்டம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார். ஆனால், ரஜினிகாந்த், நான் தான் சூப்பர் ஸ்டார் என்னை முடிஞ்சா தொட்டுப்பாரு என்பதை நிரூபித்துவிட்டார். என்னைக்குமே கழுகு ரஜினிகாந்த் தான் என்று ரஜினி குறித்து இயக்குநர் பிரவீன் காந்தி ஆவேசமாக பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X