Meiyazhagan Box Office: எட்டுத்திக்கும் பாராட்டு மழை.. மெய்யழகன் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன் விபரம்!
சென்னை: நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து, 96 படத்தினை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மெய்யழகன். இந்தப் படத்தினை சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் கார்த்தியின் 27வது படம் ஆகும். இந்தப் படத்திற்கு 96 படத்திற்கு இசை அமைத்த கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். மேலும் படத்தில் இரண்டு பாடல்களை உலக நாயகன் கமல் ஹாசன் பாடியுள்ளார். இப்படம் இன்று அதாவது செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் படத்தின் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
கார்த்தி தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக விளங்கினாலும், ஒரு கிராண்ட் ஓபனிங்கிற்கான கதாநாயகனாக இன்னும் உருவெடுக்கவில்லை. அதற்கு காரணம், அவரின் கதைத் தேர்வு முக்கியமானதாக பாரக்கப்படுகின்றது. ஆனாலும் கார்த்திக்கு இருக்கக்கூடிய ரசிகர்கள் பட்டாளம் அவர்களைக் கடந்து, பொதுமக்கள் மத்தியில் கார்த்திக்கு கிடைத்துள்ள அறிமுகம் என இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு, ஒரு நடிகர் ரூபாய் 100 கோடிகள் வரை வசூல் செய்கின்றார் என்றால், அது சாதாரண விஷயம் கிடையாது. அப்படி கார்த்திக்குக்கு ரூபாய் 100 கோடிகளை அள்ளிக் கொடுத்தப் படம் என்றால், சர்தாரைக் குறிப்பிடலாம்.

அதன் பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன், மல்டி ஹீரோ சப்ஜெக்ட்டாக இருந்தாலும், கார்த்தி கதாபாத்திரம் ஒட்டுமொத்த கதையையும் தாங்கியது. அதேபோல் இவர் நடிப்பில் வெளியான இவரது 25வது, படமான ஜப்பான் மிகவும் சுமாரான வரவேற்பைப் மட்டுமே பெற்றது.இந்நிலையில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள மெய்யழகன் படம் கார்த்திக்கு மாபெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படத்திற்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பு இதுபோன்றப் படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கு ஊக்கமாக இருக்கும்.
கார்த்தி: படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் அது கார்த்திதான். கார்த்தியின் நடிப்பு ரசிகர்களை அசரவைக்கும் நடிப்பாக உள்ளது. இசை வெளியீட்டு விழாவில் கூறியதைப்போல், தரமான மலையாளப் படத்தினைப் போல் இப்படம் தரமான படமாக உள்ளது. மிகவும் அதிரடியான எண்ட்ரி எல்லாம் இல்லாமல், கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பினை கார்த்தி வெளிக்காட்டியுள்ளதற்கு பாராட்டுகள். உடல் மொழி, வசன உச்சரிப்பு, அழுகை என அனைத்திலும் கார்த்தி பாஸ் மார்க் என்பதை விடவும், டாப் மார்க் என்பதுதான் சரியாக இருக்கும். தமிழ் சினிமாவிற்கு பெருமைதேடித்தரும் நடிப்பினை வெளிக்காட்டியுள்ளார்.

இசை: படத்தின் மற்றொரு பலம் என்றால், கோவிந்த் வசந்தாவின் இசையைக் குறிப்பிடலாம். படம் தொடங்கியது முதல் இறுதி வரை தனது இசையால் மாயாஜாலம் செய்துள்ளார் கோவிந்த் வசந்தா. இவரது இசை ஒரு இடத்தில் கூட இறைச்சல் இல்லாமல், ரசிக்கும்படியாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால், ரசிகர்களை கதைக்களத்திற்கு கையைப் பிடித்து அழைத்துச் செல்கின்றார். இவரது இசை படத்தினை நம் மனதில் நிலையாக நிறுத்தி விடுகின்றது. கோவிந்த் வசந்தாவின் இசையில் கமல் ஹாசன் பாடிய பாடலுக்கு ரசிகர்கள் அப்லாஸ்.

வசூல்: இந்நிலையில் படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 3 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், வார இறுதி நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகின்றது. இதுமட்டும் இல்லாமல், படம் ஃபேமிலி ஆடியன்ஸுக்காகவே எடுக்கப்பட்ட படம் என்பதால், படத்தின் வசூல் வரும் காலங்களில் அதிகரிக்கும் என படக்குழு நம்புகின்றது.


Click it and Unblock the Notifications