Meiyazhagan Box Office Day 2: பிரமாண்ட வெற்றியை நோக்கி நகரும் மெய்யழகன்.. வசூலில் அடிபொலி கலெக்‌ஷன்!

சென்னை: நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து, 96 படத்தினை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மெய்யழகன். இந்தப் படத்தினை சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் கார்த்தியின் 27வது படம் ஆகும். இந்தப் படத்திற்கு 96 படத்திற்கு இசை அமைத்த கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். மேலும் படத்தில் இரண்டு பாடல்களை உலக நாயகன் கமல் ஹாசன் பாடியுள்ளார். இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அதாவது செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் படத்தின் இரண்டாவது நாள் வசூல் (Meiyazhagan Box Office Day 2) குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

கார்த்தி தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக விளங்கினாலும், ஒரு கிராண்ட் ஓபனிங்கிற்கான கதாநாயகனாக இன்னும் உருவெடுக்கவில்லை. அதற்கு காரணம், அவரின் கதைத் தேர்வு முக்கியமானதாக பாரக்கப்படுகின்றது. ஆனாலும் கார்த்திக்கு இருக்ககூடிய ரசிகர்கள் பட்டாளம் அவர்களைக் கடந்து, பொதுமக்கள் மத்தியில் கார்த்திக்கு கிடைத்துள்ள அறிமுகம் என இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு, ஒரு நடிகர் ரூபாய் 100 கோடிகள் வரை வசூல் செய்கின்றார் என்றால், அது சாதாரண விஷயம் கிடையாது. அப்படி கார்த்திக்குக்கு ரூபாய் 100 கோடிகளை அள்ளிக் கொடுத்தப் படம் என்றால், சர்தாரைக் குறிப்பிடலாம்.

karthi meiyazhagan aravind swamy

அதன் பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன், மல்டி ஹீரோ சப்ஜெக்ட்டாக இருந்தாலும், கார்த்தி கதாபாத்திரம் ஒட்டுமொத்த கதையையும் தாங்கியது. அதேபோல் இவர் நடிப்பில் வெளியான இவரது 25வது, படமான ஜப்பான் மிகவும் சுமாரான வரவேற்பைப் மட்டுமே பெற்றது.இந்நிலையில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள மெய்யழகன் படம் கார்த்திக்கு மாபெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படத்திற்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பு இதுபோன்றப் படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கு ஊக்கமாக இருக்கும்.

அரவிந்த் சாமி: அரவிந்த் சாமியும் தனது நடிப்பில் மிரட்டியுள்ளார். கார்த்தியின் வீட்டில் அவர் அழும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்களையும் ஒருநொடி தவிக்க வைத்துவிடுகின்றார். இவரும் கார்த்தியும் இணைந்து பாடும் இளையராஜா காட்சிகளில் தியேட்டரே சேர்ந்து பாடுகின்றது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்கவில்லை என்றாலும், தனது நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்கின்றார். மேலும் இந்தக் கதாபாத்திரத்திற்கு தன்னைவிட பொறுத்தமானவர் யாரும் இல்லை எனக் கூறும் அளவிற்கு நடித்துள்ளார்.

karthi meiyazhagan aravind swamy

பிரேம் குமார்: 96 படத்திற்குப் பின்னர், இயக்குநரை ஆளேயே காணேம் என நினைத்துக் கொண்டு இருந்தவர்களுக்கு, 6 ஆண்டுகளுக்குப் பின்னர் தரமான படத்துடன் வந்துள்ளார் பிரேம் குமார். 96 படத்தைப் போல் பார்க்கும் ரசிகர்களுக்கு 'நல்ல படம்.. இது மாதிரி வருசமெல்லாம் படம் வந்தா மலையாளப்படமாவது, ஈரான் படமாவது" எனக் கூறும் அளவிற்கு தரமான படப்பைக் கொடுத்துள்ளார். பெரியாரின் நெற்றியில் பொட்டு, தடைக்காலத்தில் மாடுபிடி போட்டியில் பங்கேற்றதற்காக போலீஸ்க்கு ஒரு வார சஸ்பெண்ட், இலங்கைத் தமிழர் பிரச்னை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என தனது அரசியல் நிலைப்பாட்டையும் அட்டகாசமாக வெளிப்படுத்தி அப்லாஸ்களை அள்ளியுள்ளார். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் இது வெற்றிப்படம்.

வசூல்: இந்நிலையில் படம் முதல் இரண்டு நாளில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 8.5 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், முதல் நாளில் படம் ரூபாய் 3 கோடிகளுக்கு மேலும், இரண்டாவது நாளில் படம் ரூபாய் 5 கோடிகளுக்கு மேலும் வசூல் செய்துள்ளது. வார இறுதி நாளான இன்றும் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகின்றது. இதுமட்டும் இல்லாமல், படம் ஃபேமிலி ஆடியன்ஸ்க்காகவே எடுக்கப்பட்ட படம் என்பதால், படத்தின் வசூல் வரும் காலங்களில் அதிகரிக்கும் என படக்குழு நம்புகின்றது. அதேநேரத்தில் படத்தின் வசூல் குறித்து படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X