இதயம் மாதிரி படங்கள் சான்சே இல்லை.. லவ் டுடே மாதிரி படங்கள்தான் வரும்.. இயக்குநர் பிரேம்குமார் ஓபன்!
சென்னை: 96 படம் மூலம் ஏராளமான ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்த இயக்குநர் பிரேம்குமார், சில ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் மெய்யழகன் என்ற படத்தை கடந்த ஆண்டில் கொடுத்திருந்தார். 96 படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா லீட் கேரக்டர்களில் நடித்திருந்த நிலையில் காதலையும் அது கொடுக்கும் வலியையும் கதைக்களமாக்கியிருந்தார்.
இதனிடையே, உறவுகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு மெய்யழகன் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் நடிகர்கள் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக மாறியுள்ள பிரேம்குமார் விரைவில் 96 படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இயக்குநர் பிரேம்குமார்: நடிகர்கள் விஜய் சேதுபதி, திரிஷா லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான 96 படம் அவர்களுக்கு மட்டுமில்லாமல் இயக்குநர் பிரேம் குமாருக்கும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக மாறிய பிரேம்குமார் இந்தப் படத்தில் காதல், பிரேக்கப், காதலர்களின் சந்திப்பு உள்ளிட்டவற்றை கதைக்களமாக கொடுத்திருந்தார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷாவின் நடிப்பு மிகச்சிறப்பாக பார்க்கப்பட்டது. 90s kidsன் காதலை இந்தப் படம் பேசிய நிலையில், ஒவ்வொரு கேரக்டரையும் இந்தப் படத்தில் செதுக்கியிருந்தார் பிரேம்குமார்.
96 படத்தின் இரண்டாவது பாகம்: இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் விரையில் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான மெய்யழகன் படமும் மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்றது. இருந்தபோதிலும் இந்தப்படம் வசூல்ரீதியாக வெற்றி பெறவில்லை. படம் அதிகமான நேரத்துடன் ரசிகர்களின் பொறுமையை சோதிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து படத்தின் நீளத்தை ஏறக்குறைய 20 நிமிடங்கள் குறைத்துள்ளதாக பிரேம்குமார் அறிவித்திருந்தார். ஆனாலும் அது டூ லேட்டாகவே ரசிகர்களால் பார்க்கப்படடது. படத்தில் கார்த்தி அதிகமாக பேசிக் கொண்டே இருப்பதாகவும் விமர்சனங்கள் வெளியாகின.
பிரேம்குமாரின் அடுத்த பிளான்: இதனிடையே, கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள இயக்குநர் பிரேம்குமார், தான் மம்முட்டி மற்றும் மோகன்லாலின் நடிப்பை பார்த்து வளர்ந்ததாக தெரிவித்துள்ளார். அவர்களை வைத்து படம் எடுப்பது தன்னுடைய லட்சியம் மற்றும் கனவு என்றும் கூறியுள்ளார். தற்போதைய நடிகர்களில் ஃபகத் பாசில், துல்கர் சல்மான் போன்ற நடிகர்களை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் விரைவில் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
காதல் குறித்து பிரேம்குமார்: தொடர்ந்து பிரபல வாரயிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், தற்காலத்திய காதல் குறித்து பிரேம்குமார் பேசியுள்ளார். தற்போதுள்ள சமூகத்தின் சூழல், மனநிலை மற்றும் காதலை பார்க்கும்போது, லவ் டுடே போன்ற படங்களைத்தான் எடுக்க முடியும் என்றும் ஆனால் 90s கிட்ஸ் அதை ஒரு லவ் ஸ்டோரியாக மனதளவில்கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்தப் படத்தை ரொமாண்டிக் காமெடி ஜானரில்தான் சேர்ப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். தற்காலத்திய காதலைத்தான் லவ் டுடே படம் பிரதிபலித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இனிவரும் காலங்களில் இதயம் போன்ற காதல் படங்கள் வருவது சாத்தியமில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











