96 பார்ட் 2 ஸ்கிரிப்ட் ரெடி.. எனக்கே அதை படமாக்கனும்னு ஆசையா இருக்கு.. பிரேம்குமார் சிலிர்ப்பு!

சென்னை: விஜய் சேதுபதி, திரிஷா, கௌரி கிஷன், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2018ம் ஆண்டில் வெளியான படம் 96. ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக இந்தப் படத்தின் மூலம் மாற்றம் பெற்றார் படத்தின் இயக்குநர் பிரேம் குமார். படத்தில் ராம் -ஜானு என்ற கேரக்டர்களில் விஜய் -திரிஷா வாழ்ந்திருந்தனர்.

இந்தப் படம் 80ஸ் கிட்ஸ்களின் பள்ளிப் பருவத்தை கண்முன்னே நிறுத்தியது. படத்தில் கொண்டாட பல விஷயங்களை சேர்த்திருந்தார் பிரேம்குமார். இவர்களின் இளமைப்பருவ காதலர்களாக நடித்திருந்த ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷனும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றனர்.

vijay sethupathi premkumar 96 movie

96 படம்: 2018ம் ஆண்டில் வெளியாகி ஏராளமான ரசிகர்களின் மலரும் நினைவுகளை தூண்டிய படம் 96. ஒளிப்பதிவாளராக படங்களில் பணியாற்றிய பிரேம்குமார் இந்தப் படத்தின் மூலம் தன்னை இயக்குநராக மிகப்பெரிய அளவில் நிலை நிறுத்திக் கொண்டார். ஒவ்வொருவருவர் வாழ்க்கையிலும் பள்ளி, கல்லூரி காலக்கட்டங்களில் மறக்க முடியாத ஒரு காதல் அழியாமல் இருக்கும். அந்தக் காதல் பழைய நண்பர்களை சந்திக்கும்போது மீண்டும் வெளியில் வருவதை தவிர்க்க முடியாது. இந்த கான்செப்டை மையமாக வைத்தே 96 படம் உருவாகியிருந்தது. இந்தப் படத்தில் பள்ளிக் காலத்து காதலர்களாக ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷன் நடித்திருந்தனர்.,

விஜய் சேதுபதி -திரிஷா ஜோடி: இவர்கள் இந்தப் படத்தின் முக்கியமான நகர்விற்கு காரணங்களாக அமைந்த நிலையில், அதை அப்படியே அடுத்தக்கட்டத்திற்கு விஜய் சேதுபதி மற்றும் திரிஷா கொண்டு சென்றனர். இந்தப் படம் இந்திய அளவில் மிகப்பெரிய ட்ரெண்ட் செட்டராக அமைந்தது. படத்தில் கோவிந்த் வசந்தா இசையில் பாடல்களும் பின்னணியும் மனதை என்னவோ செய்ததை மறுக்க முடியாது. திருமணத்தில் முடிந்த காதல்களை காட்டிலும் தோல்வியுற்ற காதல்கள்தான் நம்முடைய மனதில் எப்போதும் நிறைந்திருக்கும் என்பதை படத்தின் திரைக்கதை மூலம் ரசிகர்களை சென்றடைய செய்திருந்தார் பிரேம்குமார்.

பிரேம்குமார் அடுத்தப்படம்: அடுத்ததாக கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள மெய்யழகன் என்ற படத்தை இயக்கியுள்ளார் பிரேம்குமார். இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை கேட்டுவிட்டு கார்த்தியே நடிக்க மிகப்பெரிய ஆர்வம் காட்டியதாக பிரேம்குமார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி கோவையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்களில் பிரேம்குமார் தற்போது பங்கேற்று வருகிறார்.

96 பார்ட் 2 ரெடி: இதனிடையே 5 ஸ்கிரிப்ட்களை தயார் செய்துள்ளதாகவும் அதில் 96 பார்ட் 2 படத்தின் திரைக்கதையை ஏறக்குறைய நிறைவு செய்து விட்டதாகவும் பிரேம்குமார் தெரிவித்துள்ளார். இந்தக் கதையை எழுதக்கூடாது என்று தான் நினைத்ததாகவும் ஆனால் எழுதி முடித்தவுடன் கதை தனக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் பிரேம்குமார் கூறியுள்ளார். இந்தக் கதையை விஜய் சேதுபதியின் மனைவியிடம் டிஸ்கஸ் செய்ததாகவும் அவர்களுக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும், முழு ஸ்கிரிப்டையும் எழுதி முடித்துவிட்டு விஜய் சேதுபதியிடம் கதையை சொல்ல திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோரின் டேட்சையும் கருத்தில் கொண்டு இந்தப் படம் உருவாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X