96 பார்ட் 2 லவ் ஸ்டோரி இல்லை.. என்ன இயக்குநர் பிரேம்குமார் இப்படி சொல்லிட்டாரு!

சென்னை: நடிகர் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள மெய்யழகன் படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த ப்ரோமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 96 என்ற படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் பிரேம்குமாரிடம் அந்த படத்தின் இரண்டாவது பாகம் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது 96 பார்ட் 2 படம் குறித்து இயக்குனர் பிரேம்குமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

premkumar 96 part 2 tamil cinema 96 2

மெய்யழகன் படம்: இயக்குனர் பிரேம்குமார் -கார்த்தி கூட்டணியில் உருவாகியுள்ள மெய்யழகன் படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தில் கார்த்தியுடன் அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். கிராமத்து பின்புலத்தில் இந்த படத்தின் கதைக்களம் உருவாகியுள்ள நிலையில் வெள்ளந்தி கிராமத்து இளைஞனாக கார்த்தியும் நகரத்திலிருந்து கிராமத்திற்கு வருபவராக அரவிந்த் சாமியும் மெய்யழகன் படத்தில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக கார்த்தியின் தங்கையாக இந்த படத்தில் நடிக்க கமிட்டாகியிருந்த ஸ்ரீதிவ்யா, தற்போது படத்தின் நாயகியாகவே நடித்துள்ளார்.

96 படம்: இந்த படத்தின் இசை வெளியீடு உள்ளிட்டவை முன்னதாக நடத்தப்பட்டுள்ள நிலையில் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் முடுக்கிவிட்டுள்ளனர். அந்த வகையில் நடிகர் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா மட்டுமில்லாமல் பிரேம்குமாரும் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 96 என்ற படத்தை இயக்கியிருந்தார் பிரேம்குமார். விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான இந்த படம், பள்ளிக் காதலை மையமாக வைத்து ரிலீஸ் ஆகியிருந்தது.

premkumar 96 part 2 tamil cinema 96 2

96 பார்ட் 2 படம்: பள்ளியில் காதலை தொலைத்த இருவர் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்கும் போது நடக்கும் உணர்ச்சி போராட்டமாக இந்த படத்தின் கதைக்களத்தை மிகச் சிறப்பாக அமைத்திருந்தார் பிரேம்குமார். இந்தப் படம் ட்ரெண்ட் செட்டராகவே அமைந்திருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் குறித்த கேள்விகள் தொடர்ந்து பிரேம்குமாரிடம் கேட்கப்பட்டு வருகின்றன. 96 படத்தின் 2வது பாகம் கண்டிப்பாக உருவாகும் என்று முன்னதாக பிரேம்குமார் தனது பேட்டியில் உறுதிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது 96 பார்ட் 2 படம் குறித்து பேசியுள்ள அவர், இந்த படம் காதலை மையமாகக் கொண்ட படமாக இருக்காது என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

காதல் படம் இல்லை: 96 படத்தின் கதைக்களம் ஃபேமிலி சென்டிமென்ட்டை மையமாக கொண்டதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 96 படம் என்றாலே காதலும் காதல் நிமித்தமும் என்ற அளவில் இருந்தது. இந்நிலையில் 96 பார்ட் 2 படம் காதலை மையமாகக் கொண்டு இருக்காது என்று பிரேம்குமார் கூறியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது கார்த்தி, அரவிந்த் சாமி கூட்டணியில் பேமிலி சென்டிமெண்டை மையமாக கொண்ட படமாக மெய்யழகன் உருவாகியுள்ள நிலையில், அதை தொடர்ந்து அதே ஜானரில் 96 படத்தையும் அவர் இயக்க உள்ளாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X